மூணார்
From Wikipedia, the free encyclopedia
மூணாறு கேரளத்தின் தென் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1600–1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. மூணாறு நகரமும், அதைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களும் சேர்ந்தே மூணாறு என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில் ஆகும். முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால், மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. தேயிலைத் தோட்டங்களும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் இந்நகரின் சிறப்பியல்புகள். உதகமண்டலம், கொடைக்கானலிற்குப் பிறகு, தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடை வாழிடம் மூணாறு. இந்நகரின் பெரும்பான்மையான மக்கள் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள் ஆவர்.
விரைவான உண்மைகள் மூணாறு ஊராட்சி, நாடு ...
மூணாறு ஊராட்சி | |
---|---|
மலை வாழிடம் | |
அடைபெயர்(கள்): தென்னிந்தியாவின் காஷ்மீர் | |
ஆள்கூறுகள்: 10°05′21″N 77°03′35″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | இடுக்கி |
பெயர்ச்சூட்டு | தேயிலைத் தோட்டங்கள், குளிர்ச்சியான சூழ்நிலை |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
• நிர்வாகம் | மூணார் ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 187 km2 (72 sq mi) |
ஏற்றம் | 1,532 m (5,026 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 38,471 |
• அடர்த்தி | 210/km2 (530/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மலையாளம், ஆங்கிலம் |
• பிராந்திய மொழி | தமிழ் [2], மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 685 612 |
தொலைபேசி குறியீடு | 04865 |
வாகனப் பதிவு | KL-68 & -06 |
எழுத்தறிவு | 76% |
இணையதளம் | keralatourism |
மூடு