மு. கருணாநிதி
தமிழக அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.
விரைவான உண்மைகள் கலைஞர்மு. கருணாநிதி, 3-ஆவது தமிழ்நாடு முதலமைச்சர் ...
கலைஞர் மு. கருணாநிதி | |
---|---|
3-ஆவது தமிழ்நாடு முதலமைச்சர் | |
பதவியில் 13 மே 2006 – 15 மே 2011 | |
Deputy | மு.க.ஸ்டாலின் (2009 முதல்) |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | ஜெ. ஜெயலலிதா |
தொகுதி | சேப்பாக்கம் |
பதவியில் 13 மே 1996 – 13 மே 2001 | |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | ஜெ. ஜெயலலிதா |
தொகுதி | சேப்பாக்கம் |
பதவியில் 27 சனவரி 1989 – 30 சனவரி 1991 | |
முன்னையவர் | வி. என். ஜானகி |
பின்னவர் | ஜெ. ஜெயலலிதா |
தொகுதி | துறைமுகம் |
பதவியில் 15 மார்ச் 1971 – 31 சனவரி 1976 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | சைதாப்பேட்டை |
பதவியில் 10 பெப்ரவரி 1969 – 4 சனவரி 1971 | |
முன்னையவர் | சி. என். அண்ணாதுரை[lower-alpha 1] |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | சைதாப்பேட்டை |
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 15 மே 2011 – 7 ஆகத்து 2018 | |
முன்னையவர் | உ. மதிவாணன் |
பின்னவர் | கே. பூண்டி கலைவாணன் |
தொகுதி | திருவாரூர் |
தலைவர் - திராவிட முன்னேற்றக் கழகம் | |
பதவியில் 27 ஜூலை 1969 – 8 ஆகஸ்ட் 2018 | |
முன்னையவர் | நிலை நிறுவப்பட்டது |
பின்னவர் | மு. க. ஸ்டாலின் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1924-06-03)3 சூன் 1924 திருக்குவளை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம்) |
இறப்பு | 7 ஆகத்து 2018(2018-08-07) (அகவை 94)[1] சென்னை, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பிற அரசியல் தொடர்புகள் | நீதிக்கட்சி, திராவிடர் கழகம் (1949க்கு முன்னர்) |
துணைவர்(கள்) | பத்மாவதி தயாளு இராசாத்தி |
உறவுகள் | பார்க்க கருணாநிதி குடும்பம் |
பிள்ளைகள் | 6, முத்து, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி உட்பட |
வாழிடம் | கோபாலபுரம் (சென்னை) |
மூடு