சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 11 ஆக இருந்தது. 79-லிருந்து, 86 வரையுள்ள சென்னை மாநகராட்சியின் வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளைக்கொண்டு இத்தொகுதி அமைக்கப்பெற்றது. துறைமுகம், பூங்கா நகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்பிற்குப் பின்னர் இத்தொகுதி நீக்கப்பட்டு விட்டது[1].