From Wikipedia, the free encyclopedia
மாந்தரின மரபியலில், மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழு (human Y-chromosome DNA haplogroup) என்பது ஒய் மரபன் எனும் ஒய் குறுமவகத்தின் மீள்சேரவியலாத மரபனின் பகுதிகளின் வேறுபாட்டால் வரையறுக்கப்படு ஒருமைப் பண்புக் குழுவாகும். இது ஒய் குறுமவகத்தில் உள்ள ஒற்றைக் கருவன் பலவுருவாக்கங்களினல் பதிவாகியுள்ள மாந்தரின மரபியல் பன்மையைக் குறிக்கிறது.[1]
ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் ஒய் குறுமவகத் தொகுதிமரபுக் கிளைபிரிவமைப்பின் பேரியல் கிளைகளைக் குறிக்கின்றன. இன்று வாழும் அனைத்து மாந்தரினத்துக்கும் முதல் வேர்நிலை தந்தைவழியின் மிக அண்மைப் பொது மூதாதையை ஒர் குறுமவக ஆதாம் என மரபியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஒய் குறுமவக ஆதாமின் காலம் பல ஆய்வுகளில் பலவாறு அறுதியிடப்பட்டுள்ளது. தொல்லியல், மரபியல் தகவல்களின்படி, பழைய கற்கால மாந்தரின முதல் மக்கள்தொகை பனியூழிப் பெரும நிலைக்காலத்தில் நிலவியதாகவும் மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் தளர்வான காட்டுப் பகுதியில் தோன்றியதெனவும் அடர்காடுகளைத் தவிர்த்துவிட்டு உயர் ஆக்கத்திறன் உள்ல பகுதிகளில் பரவியதெனவும் தெரிய வந்துள்ளது.[2]
ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள். ஒய் குறுமவகத் தொகுதிவழி கிளைபிரிவமைப்பின் மிகவும் கீழே அமைந்த ஒய் மரபன் ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கக் குறிப்பான்களின் தொடர் இருப்பினை வைத்து வரையறுக்கப்படுகின்றன. இவற்றின் துணைக்கவைகள், ஒய் குறுமவகத் தொகுதிவழி கிளைபிரிவமைப்பின் மிகவும் கீழே அமைந்த ஒற்றை கருவன் பல்லுருவாக்கத்தை வைத்து, அதாவது ஈற்று ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கத்தின் இருப்பை வைத்து வரையறுக்கப்படுகின்றன.[3][4]>ஒய் குருமவகப் பேரவை(Y Chromosome Consortium) பேரியல் ஒருமைப் பண்புக் குழுக்களையும் அவற்றின் துணைக்கவைகளையும் பெயரிடும் நெடுங்கைமுறைப் பெயரீட்டையும் குறுங்கைமுறைப் பெயரீட்டையும் உருவாக்கியுள்ளது. நெடுங்கைமுறைப்படி, பேரியல் ஒருமைப் பண்புக் குழுக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்துகள் A முதல் T வரையுள்ள எழுத்துகளாலும் அவற்றின் துணைக்கவைகள் எண்களோடு ஆங்கிலச் சிறிய எழுத்துகளாலும் குறிக்கப்படும். குறுங்கைமுறைப்படி, பேரியல் ஒருமைப் பண்புக் குழுக்களும் அவற்றின் துணைக்கவைகளும் முன்னதன் முதல் எழுத்தும் அதைத் தொடர்ந்து ஒரு சிறுகோடும் பின்னதன் ஈற்று ஒற்றைக் கருவன் பல்லுருவாக்க இருப்பை வரையறுக்கும் பெயரும் அமையும்படி குறிக்கப்படுகின்றன.[5]
புதிய ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் கண்டறியப்படும்போது அவற்றையும் உள்ளடக்க நேருவதால் ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களின் பெயரீடுகளும் காலங்காலமாக மாறியவண்ணமே உள்ளன.இதனால் அதன் தொகுதிவழிக் கிளைபிரிவமைப்பும் நீண்டபடியே உள்ளது. தொடர்ந்து பெயரீடு மாறுவதால் பல்வேறு ஆய்வுகளில் குழப்பமான பெயரீடுகள் அமைந்துவிடுகின்றன.[1]நெடுங்கைமுறைப் பெயரீட்டின் இந்தத் தொடர் இயைபின்மையும் இடைஞ்சலான விரிவும், எளிய குறுங்கைமுறைப் பெயரீட்டை நோக்கி நகர வழிவகுத்தது. 2012 செட்டம்பரில் உருவாக்கிய மரபன் குடும்பக் கிளைபிரிவமைப்பு, ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுப் பெயரீட்டு மாற்றத்துக்கான பின்வரும் விளக்கத்தை ஆய்வாளரின் ஒய் மரபன் முடிவுகளின் பக்கத்தில் அளிக்குமாறு வேண்டுகிறது (கவனிக்க, கீழே குறிப்பிட்ட ஒருமைப் பண்புக் குழு தனி ஆய்வாளரைச் சார்ந்தது):[6]
குடும்ப கிளைபிரிவு மரபன் முறையின் நெடுநாளைய வாடிக்கையாளர்கள் செறிநிலை மாந்தரின் YCC-கிளைபிரிவு, புதிய ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கல் கண்டறியும் போது கடந்த பல ஆண்டுகளாகப் படிமலர்ந்து வருவதை அறிவர். சிலவேளைகளில் இவ்வகை ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் ஈற்று ஒருமைப் பண்புக் குழுவின் நெடுங்கை விளக்கத்தைக் கணிசமாக மாற்றிவிடுகின்றன. இந்தக் குழப்பத்தால், சில ஆண்டுகளுக்கு முன்பு குறுங்கை வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது, இது கிளைபிரிவின் கவை, ஈற்று ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கம் ஆகியவற்றை வரிசையில் வைத்துக் குறிக்கிறது அதாவது J-L147 என J1c3d என்பதற்கு மாற்றாகக் குறிக்கிறது. எனவே மிக நெருங்கிய குறிப்பில் குடும்பக் கிளைபிரிவு, மரபனில்நடப்பு நெடுங்கையை கிலைபிரிவில் காட்டாமல் விட்டுவிட்டு ஈற்று ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கத்தில் மட்டும் கவனத்தைக் குவிக்கிறது.
இது அறிவியல் உண்மையை மாற்றாது. ஆனால், எளிய குழப்பமற்ற கருத்து உரையாடலுக்கு உதவுகிறது.—பென்னெட் க்ரீனிசுபேன், பேமிலி ட்ரீ டி.என்.ஏ.
மரு. மைக்கேல் எப். ஹேம்மர், அரிசோனா பல்கலைக்கழகம்
பேரியல் ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் பின்வருமாறு:[7] ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களின் தொகுதிமரபுக் கிளைபிரிவு
ஒய்-மரபன் ஆதாம் |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒருமைப் பண்புக் குழு A ஆப்பிரிக்க ஒருமைப் பண்புக் குழுவாகும். இதில் இருந்து தான் இன்றைய அனைத்து ஒருமைப் பண்புக் குழுக்களும் தோன்றின. ஒருமைப் பண்புக் குழு BT ஒருமைப் பண்புக் குழு A வின் ஒரு கிளைப்பிரிவு ஆகும். துல்லியமாக, A1b யின் கிளைப்பிரிவு (A2-T குருசியானி குழு. 2011), பின்வருமாறு:
A, B ஒருமைப் பண்புக் குழுக்களைத் தவிர்த்த மற்ற ஒருமைப் பண்புக் குழுக்களை CT யில் இருந்து தனியாகப் பிரிக்கும் சடுதிமாற்றங்களாக M168 குறிப்பானும் M294 குறிப்பானும் அமைகின்றன. இவை ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறுவதற்கு முன்பே ஏற்பட்டுள்ளன. DE ஐ வரையறுக்கும் சடுதி மாற்றங்கள் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் 65,00 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கவேண்டும்.[8]CF ஒருமைப் பண்புக் குழுவை வரையறுக்கும் P143 சடுதிமாற்றம் அதேநேரத்தில் ஏற்பட்டு புத்தியல்பு மாந்தரை ஆசியாவின் தென்கடற்கரைக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது .
ஒருமைப் பண்புக் குழு F இல் இருந்து வந்த இந்தக் குழுக்கள் உலக மக்கள்தொகையின் 90% அளவில் அமைந்துள்ளன. குறிப்பாக ஆப்பிரிக்காவின் சகாரா உட்பகுதிக்கு வெளியே அமைந்துள்ளன. இந்த IJ இன் சடுதிமாற்ற நகர்வு அலை 45,000 ஆண்டுகளுக்கு முன்பு நடுவண் கிழக்குப் பகுதி அல்லது தெற்காசியாவுக்கு வெளியே ஏற்பட்டு ஐரோப்பாவுக்குப் (குரோமாக்னான்) பரவியுள்ளது.
ஒருமைப் பண்புக் குழு G, நடுவண் கிழக்குப் பகுதியில் அல்லது நெடுங்கிழக்காக ஆப்கானித்தான வார்டாக் பகுதியில் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி புதிய கற்காலப் புரட்சியின்போது ஐரோப்பாவில் பரவியுள்ளது. ஒருமைப் பண்புக் குழு H, 30 முதல் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றி அங்கேயே பரவலாக அமைந்து வரலாற்றுக் காலங்களில் உரோம்மனியர் நகர்வோடு மேற்கே பரவியுள்ளது. ஒருமைப் பண்புக் குழு K, பரவலாக ஐரோப்பாசியாவிலும் ஆத்திரேலியாவிலும் தென்பசிபிக் பகுதிகளிலும் பரவியுள்ளது.
ஒருமைப் பண்புக் குழு L முதன்மையாக தெற்காசியாவில் அமைந்துள்ளது. ஒருமைப் பண்புக் குழு M மெலனேசியாவில் பரவலாக உள்ளது. ஒருமைப் பண்புக் குழு NO 35 முதல் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியா வில் தோன்றியது.
ஒருமைப் பண்புக் குழு N தென்கிழக்கு ஆசியாவில் தோன்றி, வடக்கே சைபீரியாவில் பரவியுள்ளது; மேற்கே, யுராலிக் மக்களில் மிகப் பொதுவாக அமைந்துள்ளது. ஒருமைப் பண்புக் குழு O கிழக்கு ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் உயர் நிகழ்வெண்ணிலும், தென்பசிபிக்கிலும், நடுவண் ஆசியாவிலும் தெற்காசியாவிலும் குறைவான நிகழ்வெண்ணிலும் அமைந்துள்ளது. ஒருமைப் பண்புக் குழு P , ஒருமைப் பண்புக் குழுக்கள் Q, R ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. இவை வேறுபடுத்த முடியாத நிலையில் மிகவும் அருகியே உள்ளன. இது நடுவண் ஆசியாவிலோ அல்டாய் மலைகள் பகுதியிலோ தோன்றியிருக்க வாய்ப்புள்ளது. ஒருமைப் பண்புக் குழு Q வும்கூட நடுவண் ஆசியாவில் தோன்றி, கிழக்கில் நகர்ந்து வட அமெரிக்காவை அடைந்திருக்கலாம்.
ஒருமைப் பண்புக் குழு NO அமு 35-40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்காசியாவில் தோன்றியது. ஒருமைப் பண்புக் குழு N கிழக்காசியாவில் தோன்றி, மேற்கே சைபீரியாவிலும் வடக்கே யுராலிக் மக்களிலும் பரவியுள்ளது. ஒருமைப் பண்புக் குழு O கிழக்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் உயர் wநிகழ்வெண்ணிலும்ஓசியானாவின் தென்பசிபிக்கிலும்நடுவண் ஆசியாவிலும் தெற்காசியாவிலும் குறைவான நிகழ்வெண்ணிலும் அமைந்துள்ளது.
ஒருமைப் பண்புக் குழு P (M45) இருகிளைகளைக் கொண்டுள்ளது. அவை Q-M242 and R-M207 என்பனவாகும். இவை M45 ஐப் பொதுவானக் குறிப்பானாகக் கொண்டுள்ளன.மேலும் குறைந்தது 18 பிற ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்களையும் பெற்றுள்ளன.
ஒருமைப் பண்புக் குழு Q
Q என்பது SNP M242 குறிப்பானால் வரையறுக்கப்படுகிறது. இது நடுவண் ஆசியாவில் 17,000 முதல் 22,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்ப்ப்படுகிறது.[11][12] ஒருமைப் பண்புக் குழுவின் துணைக்கவைகள் அவற்றின் சடுதிமாற்றங்களுடன் 2008 ஆம் ஆண்டு பன்னாட்டு மரபியல் கால்வழிக் கழகத்தின் (ISOGG) வரையறைப்படிக்கான கிளைபிரிவு [13] கீழே தரப்பட்டுள்ளது. ss4 bp, rs41352448 என்பது STR இன் மதிப்பு ஆகையால், இக்கிளைபிரிவில் குறிக்கப்படவில்லை. இந்தப் புதுமையான குறைந்த மதிப்பு Q கால்வழியில் (Q5) இந்திய மக்கள்தொகையில் அமைந்துள்ளது[14]
2008 ஆம் ஆண்டு பன்னாட்டு மரபியல் கால்வழிக்கழகத்தின்படியானக் கிளைப்பிரிவு
ஒருமைப் பண்புக் குழு R
ஒருமைப் பண்புக் குழு R என்பது SNP M207 எனும் குறிப்பானால் வரையறுக்கப்படுகிறது. ஒருமைப் பண்புக் குழு R இன் பெரும்பகுதி ஐரோப்பாசிய சுதெப்பியில் தோன்றிய தன் பிறங்கடைக் (வாரிசு) கால்வழியான துணைக்குழு R1 ஆல் ஆனதாகும். R1 இல் இரண்டு துனைக்குழுக்கள் R1aவும் R1bயும் அடங்குகின்றன.
ஒருமைப் பண்புக் குழு R1a முதனிலை இந்தோ-இரானிய மொழி பெசுவோரிடமும் பால்டோ-சுலாவிக் மொழி பேசுவோரிடமும் உள்ளது. இது அண்மையில் நடுவண் ஆசியாவிலும் தெற்காசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவியுள்ளது.
ஒருமைப் பண்புக் குழு R1b, மேற்கு ஐரோப்பாவின் ஓங்கலான ஒருமைப் பண்புக் குழுவாகும். மேலும் இது ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நீர்த்தநிலையில் பரவியுள்ளது.ளைதன் துணைக்குழு R1b1a2 (M269) அண்மை மேற்கு ஐரோப்பியர்களில் மிகப் பொதுவாகப் பரவியுள்ள ஒருமைப் பண்புக் குழுவாகும்.
ஒருமைப் பண்புக் குழு | தோன்றிய காலம் | தோன்றிய இடம் | வாய்ப்புள்ள TMRCA[18][19] | |
A00 | 192–307,000 ஆண்டுகள் முன்பு | |||
E | 50-55,000 ஆண்டுகள் முன்பு[20][21] | கிழக்கு ஆப்பிரிக்கா[22] அல்லது ஆசியா[23] | 27-59,000 ஆண்டுகள் முன்பு | |
F | 38-56,000 ஆண்டுகள் முன்பு | |||
IJ | 30-46,000 ஆண்டுகள் முன்பு | |||
K | 40-54,000 ஆண்டுகள் முன்பு | |||
E-M215 (E1b1b) | 31-46,000 ஆண்டுகள் முன்பு[24] | 39-55,000 ஆண்டுகள் முன்பு | ||
P | 27-41,000 ஆண்டுகள் முன்பு | |||
J | 19-44,500 ஆண்டுகள் முன்பு[25] | |||
R | 20-34,000 ஆண்டுகள் முன்பு | |||
I | 15-30,000 ஆண்டுகள் முன்பு | |||
R-M173 (R1) | 13-26,000 ஆண்டுகள் முன்பு | |||
I-M438 (I2) | 28-33,000 ஆண்டுகள் முன்பு[26] | 16,000-20,000 ஆண்டுகள் முன்பு | ||
E-M35 | 20,000-30,000 ஆண்டுகள் முன்பு[24] | 15–21,000 ஆண்டுகள் முன்பு | ||
J-M267 (J1) | 15-34,000[25] ஆண்டுகள் முன்பு | |||
R-M420 (R1a) | 22,000 ஆண்டுகள் முன்பு[27] | 8-10,000 ஆண்டுகள் முன்பு | ||
R-M343 (R1b) | 22,000 ஆண்டுகள் முன்பு [28] | மேற்காசியா [29] | ||
N | at least 21,000 ஆண்டுகள் முன்பு (STR age)[30] | |||
I-M253 (I1) | 11-21,000[31] or 28-33,000 ஆண்டுகள் முன்பு [26] | 3-5,000 years ago | ||
J-M172 (J2) | 15,000-22,000[25] ஆண்டுகள் முன்பு | 19-24,000 ஆண்டுகள் முன்பு[32] | ||
E-M78 | 15-20,000[24] or 17,500-20,000 ஆண்டுகள் முன்பு [33] | வடகிழக்கு ஆப்பிரிக்கா[33] | குறைந்தது 17,000 ஆண்டுகள் முன்பு[33] | |
E-V12 | 12,500-18,000 ஆண்டுகள் முன்பு[33] | |||
R-M17 | 13 ,000[27] or 18,000 ஆண்டுகள் முன்பு[34] | இந்தியா | ||
I-L460 (I2a) | present 13,000 ஆண்டுகள் முன்பு [35] | |||
I-M223 | 11-18,000 ஆண்டுகள் முன்பு[31] | |||
E-V13 | 7-17,000 ஆண்டுகள் முன்பு[33] | மேற்கு ஆசியா[33] | 4,000-4,700 ஆண்டுகள் முன்பு (Europe) 6,800-17,000 ஆண்டுகள் முன்பு (ஆசியா)[33] | |
R-Z280 | 11-14,000 ஆண்டுகள் முன்பு[36] | |||
N-M46 (N1c1) | at least 12,000 ஆண்டுகள் முன்பு (STR age)[30] | |||
R-M458 | 11,000 ஆண்டுகள் முன்பு[36] | |||
I-P37 | 6-16,000,[31] present 10,000 years ago[37] | |||
I-M423 (I2a1b) | present 10,000 ஆண்டுகள் முன்பு[37] | |||
I-M26 (I2a1a) | 2-17,000,[31] அண்மைக்கு 8,000 ஆண்டுகள் முன்பு[37] | |||
R-M269 | 5,500-8,000 ஆண்டுகள் முன்பு[38] | |||
R-L11, R-S116 | 3-5,000 ஆண்டுகள் முன்பு | |||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.