From Wikipedia, the free encyclopedia
ஆசிய கண்டத்தின் தென்மேற்குப் பகுதி தென்மேற்கு ஆசியா அல்லது தென்மேற்காசியா என அழைக்கப்படுகிறது. மேற்கு ஆசியா என அழைக்கப்படும் பகுதியும் இதை கிட்டத்தட்ட ஒத்ததாகும். வடக்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகளையும் உள்ளடக்கும் மத்திய கிழக்கின் வரைவிலக்கணத்தைப் போலால்லாது தென்மேற்கு ஆசியா புவியியலை மட்டுமே சார்ந்த ஒரு வரைவிலக்கணமாகும்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (ஓஇசிடி) மாடிசனின் உலக பொருளாதாரம்: வரலாற்று புள்ளிவிபரம் பஹ்ரைன், ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமான் , கத்தார், பாலஸ்தீனிய பிரதேசங்கள், சவுதி அரேபியா, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் யேமன் ஆகியவற்றை மேற்கு ஆசிய நாடுகளாக வகைப்படுத்தியுள்ளன.[1] 2015 ஆம் ஆண்டு இந்த வரையறைக்கு மாறாக ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (யுனிடோ) புத்தகத்தில் தென்மேற்கு ஆசிய நாடுகளில் ஆர்மேனியா, அசர்பைஜான் என்பவற்றை உள்ளடக்கி இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகியவற்றை நீக்கியது.[2] ஆனால் ஐக்கிய நாடுகளின் புள்ளிவிபர பிரிவு (யுஎன்எஸ்டி) ஈரானை தென்மேற்கு ஆசிய நாடுகளில் விலக்கி, துருக்கி, ஜார்ஜியா மற்றும் சைப்ரஸ் என்பவற்றை உள்ளடக்கியது. ஐக்கிய நாடுகளின் புவிசார் அரசியல் ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியா என்பவற்றை கிழக்கு ஐரோப்பிய குழுவிலும் சைப்ரஸ் மற்றும் கிழக்கு திரேசிய துருக்கியை தெற்கு ஐரோப்பாவிலும் வகைப்படுத்தியுள்ளது.[3]
தென்மேற்கு ஆசியா கிழக்கு ஐரோப்பாவின் தெற்கே அமைந்துள்ளது. இப்பகுதிகள் ஏஜியன் கடல், கருங்கடல், காஸ்பியன் கடல், பாரசீக வளைகுடா, அரேபிய கடல், செங்கடல் மற்றும் மத்தியதரைக்கடல் ஆகிய ஏழு பெரிய கடல்களால் சூழப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி வடக்கே ஐரோப்பாவின் காகசஸ் மலைகளினாலும், தென்மேற்கே ஆபிரிக்காவின் சூயஸ் குறுநிலத்தாலும் பிரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்காசியாவின் கிழக்கு மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவுடன் இணைந்துள்ளது. இயற்கையாகவே ஆசியாவில் இருந்து இப்பகுதி கிழக்கு ஈரானில் அமைந்துள்ள டாஸ்-இ காவிர் மற்றும் டாஸ் இ லூட் பாலைவனங்களால் ஒரளவு பிரிக்கப்படுகின்றது.
தென்மேற்கு ஆசிய நிலப்பரப்பில் ஆபிரிக்க, யூரேசிய மற்றும் அரேபிய ஆகிய மூன்று பெரிய புவியோட்டுக்குரிய தகடுகள் ஒன்றிணைகின்றன. புவியோட்டுக்குரிய தகடுகளுக்கு இடையிலான எல்லைகள் அசோரஸ்-ஜிப்ரால்டர் ரிட்ஜ், வட ஆபிரிக்கா, செங்கடல் மற்றும் ஈரான் வரை பரவியுள்ளன.[4]
2008 ஆம் ஆண்டு நிலவரப்படி தென்மேற்கு ஆசியாவின் சனத்தொகை 272 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. சனத்தொகை 2030 ஆம் ஆண்டில் 370 மில்லியனை எட்டும் என்று மாடிசனால் கணிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ஆசியாவின் சனத்தொகை உலக சனத்தொகையில் சுமார் 4% வீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் 39 மில்லியனாக காணப்பட்டது. அந்த சமயத்தில் உலக சனத்தொகையில் சுமார் 2% வீதமாக இருந்தது. இப்பகுதியில் அதிக சனத்தொகை கொண்ட நாடுகள் துருக்கி மற்றும் ஈரான் என்பனவாகும். இந்நாடுகளில் சுமார் 79 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் தலா 33 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.[5]
தென்மேற்கு ஆசியா உயர் பொருளாதார வளர்ச்சியை கொண்டது. துருக்கி மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சவூதி அரேபியா மற்றும் ஈரான் என்பன காணப்படுகின்றன. இந்த பிராந்தியத்தில் பெற்றோலியம் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. இப்பகுதில் உலகின் அதிகளவு எண்ணெய் இருப்புக்களும், 40% வீதத்திற்கு மேற்பட்ட இயற்கை வாயு இருப்புக்களும் காணப்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.