மத்திய கிழக்கு
மேற்கு ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவை உள்ளடக்கிய வலயம் From Wikipedia, the free encyclopedia
மத்திய கிழக்கு (Middle East) வரலாற்று மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஆபிரிக்க-யூரேசியாவின் ஒரு உட்பிரிவாகும். மரபுநோக்கில் இது, எகிப்துடன் சேர்த்துத் தென்மேற்கு ஆசிய நாடுகளை அல்லது அப்பகுதி்களைக் குறித்தது. வேறு சூழ்நிலைகளில் இப்பிரதேசம், வட ஆபிரிக்காவின் பகுதிகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் போன்றவற்றையும் சேர்த்துக் குறிப்பதுண்டு.
இயல்புகள்
மேற்கத்திய நாடுகளில், மத்திய கிழக்குப் பகுதி என்பது பெரும்பாலும், தொடர்ச்சியான சண்டைகளில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய அராபிய சமுதாயங்களையே குறிப்பதாக எண்ணுகிறார்கள். அனாலும், இப்பிரதேசம், பல தனித்துவமான பண்பாட்டு மற்றும் இனக்குழுக்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. அராபியர், ஆர்மீனியர், அசிரியர், அசெரிகள், பேர்பெர்கள், கிரேக்கர், யூதர், மரோனைட்டுகள், பாரசீகர், துருக்கியர் முதலான பலர் இதனுள் அடங்குகின்றனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.