மலேசிய மக்கள் இயக்கக் கட்சி
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி / From Wikipedia, the free encyclopedia
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி (மலாய்: Parti Gerakan Rakyat Malaysia, ஆங்கில மொழி: Malaysian People's Movement Party, ஆங்கில மொழி: 马来西亚民政运动党) என்பது மலேசியாவில் ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சியாகும். 24 மார்ச் 1968-இல் தோற்றுவிக்கப்பட்டது.[2] இப்போது ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாக இருக்கின்றது.
கெராக்கான் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி Malaysian People's Movement Party 马来西亚民政运动党 Parti Gerakan Rakyat Malaysia | |
---|---|
![]() | |
தலைவர் | லியு ஹூகாய் |
தொடக்கம் | மார்ச் 24, 1968 |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
கொள்கை | இனக்கொள்கை தாராண்மைவாதம் |
தேசியக் கூட்டணி | பெரிக்காத்தான் நேசனல் |
பன்னாட்டு சார்பு | ஜனநாயக கூடமைப்பு, [1] |
வட்டார இணைப்பு | ஆசிய ஜனநாயக இனக்கொள்கை மன்றம் |
கட்சிக்கொடி | |
![]() | |
இணையதளம் | |
www.gerakan.org.my |
கெராக்கான் என சுருக்கமாக அழைக்கப்படும் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி, தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு எதிரான கட்சியாக இருந்தது. 1969 மலேசியப் பொதுத் தேர்தலில் கெராக்கான் கட்சி, பினாங்கு மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களை வென்றது. மலேசிய இஸ்லாமிய கட்சி கிளாந்தான் மாநிலத்தைக் கைப்பற்றியது.
அந்தக் காலகட்டத்தில் இவ்விரு கட்சிகளும் ஆளும் கூட்டணியுடன் கூட்டு சேரவில்லை. இருப்பினும், 1973இல் கெராக்கான் கட்சியும் ஆளும் கூட்டணியும் இணைந்து தேசிய முன்னணி எனும் புதிய கூட்டணியை உருவாக்கின.