புவனகிரி
கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா From Wikipedia, the free encyclopedia
கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா From Wikipedia, the free encyclopedia
புவனகிரி (ஆங்கிலம்:Bhuvanagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி வட்டம் மற்றும் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.
புவனகிரி | |||||
அமைவிடம் | 11°28′N 79°38′E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | கடலூர் | ||||
வட்டம் | புவனகிரி வட்டம் | ||||
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||
மக்களவைத் தொகுதி | புவனகிரி | ||||
சட்டமன்றத் தொகுதி | புவனகிரி | ||||
சட்டமன்ற உறுப்பினர் |
அ. அருண்மொழித்தேவன் (அதிமுக) | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
21,956 (2011[update]) • 1,474/km2 (3,818/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
14.9 சதுர கிலோமீட்டர்கள் (5.8 sq mi) • 11 மீட்டர்கள் (36 அடி) | ||||
குறியீடுகள்
|
புவனகிரி ராகவேந்திரர் அவதரித்த தலமாகும். மேலும் விருத்தாச்சலம் பரங்கிபேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக செல்லும் வெள்ளாற்று படுகையில் அமைந்துள்ள புவனகிரி பசுமைமிகுந்த செழிப்பான நகரம் ஆகும். இங்கு முக்கிய வணிகமாக பட்டுவியாபாரம் நடைபெற்று வருகிறது.
மாவட்டத் தலமையிடமான கடலூரிலிருந்து 43 கிமீ தொலைவில் உள்ள புவனகிரி பேருராட்சிக்கு அருகில் உள்ள தொடருந்து நிலையம், 9 கிமீ தொலைவில் கிழக்கில் உள்ள சிதம்பரம் ஆகும். இதன் மேற்கில் விருத்தாச்சலம் 37 கிமீ; வடக்கில் வடலூர் 12 கிமீ தொலைவில் உள்ளது.
14.9 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 91 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி புவனகிரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,400 வீடுகளும், 21,956 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.69% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 990 பெண்கள் வீதம் உள்ளனர். [2]
இவ்வூரின் அமைவிடம் 11.47°N 79.63°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் இருக்கின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.