![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fe/Brian_Lara_Portrait.jpg/640px-Brian_Lara_Portrait.jpg&w=640&q=50)
பிறயன் லாறா
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
பிறயன் சார்லஸ் லாறா (Brian charles Lara) (பிறப்பு: மே 2, 1969) என்பவர் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் ஆவார்.[1][2] அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[3][4][5] தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசைகளில் பலசமயங்களில் முதல் இடத்தில் இருந்துள்ளார். மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தது.[6] மேலும் 1994 ஆம் ஆண்டில் தர்ஹாம் அணிக்கு எதிராக 501 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒருவர் ஐந்து சதம் எடுப்பது அதுவே முதல் முறை. இந்தச் சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது. 2004 ஆம் ஆண்டில் ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக 400 ஓட்டங்கள் எடுத்து வீழாமல் இருந்தார்.[7] இந்த ஓட்டங்களே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஒரு பகுதியில் தனி நபர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.லாறா மட்டுமே நூறு, இருநூறு, முந்நூறு, நாநூறு, ஐந்நூறு ஆகிய ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் ஆவார்.[8][9] தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒர் ஓவரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவரும் லாறா தான். 2003 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் ராபின் பீட்டர்சன் ஓவரில் 28 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்பு 2013 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் பெய்லி இந்தச் சாதனையை சமன் செய்தார்.[10]
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பிறயன் சார்லசு லாறா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | மே 2, 1969 (1969-05-02) (அகவை 55) சாண்டா குரூஸ் ,டிரினிடாட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | Prince | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 8 அங் (1.73 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | நடுத்தர வரிசை மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வலைத்தளம் | http://bclara.com | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 196) | 6 டிசம்பர் 1990 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 27 நவம்பர் 2006 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 59) | 9 நவம்பர் 1990 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 21 ஏப்ரல் 2007 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 9 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1987–2008 | திரினிடாட் டொபாகோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1992–1993 | நார்தன் டிரான்ஸ்வால் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1994–1998 | வார்விக்சயர் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010 | சதர்ன் ராக்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக் இன்போ.com, 4 பெப்ரவரி 2012 |
1999 இல் பார்படோசுவில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக வீழாமல் 153 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு இந்தப் போட்டியை இரண்டாவது சிறந்த மட்டைச் செயல்பாடாக தரவரிசைப்படுத்தியது. 1937 ஆம் ஆண்டில் ஆஷஸ் போட்டியில் டான் பிராட்மன் 270 ஓட்டங்கள் அடித்தது முதல் இடத்தில் உள்ளது.[11] விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது சிறந்த தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் சிறந்த பந்துவீச்சாளராக முத்தையா முரளிதரனை அறிவித்தது.[12][13][14] முரளிதரன், லாறாவிற்கு பந்துவீசுவது தான் மிகச் சவாலாக இருந்ததாகக் கூறினார்.[15] 1994 மற்றும் 1995 ஆம் ஆண்டின் சிறந்த விசுடன் துடுப்பாட்டாளராக லாறா தேர்வானார்.[16] சோபர்ஸ் மற்றும் ஷேன் வோர்ன்க்கு அடுத்தபடியாக பி பி சி யின் இஓவர்சீஸ் விருது பெறும் மூன்றாவது வீரர் லாறா ஆவார்.[17]
நவம்பர் 27,2009 ஆம் ஆண்டிலி ஆர்டர் ஆஃப் ஆத்திரேலியா எனும் விருதினைப் பெற்றார்.[18] செப்டம்பர் 14, 2012 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஹால் ஆஃப் ஃபேமாக அறிவிக்கப்பட்டார். 2012-2013 இல் நடைபெற்ற விழாவில் கிளென் மெக்ரா மற்றும் இங்கிலாந்து பெண் துடுப்பாட்ட அணியைச் சார்ந்த சகலத் துறையர் எனித் பேக் வெல் ஆகியோருக்கும் இந்த விழாவில் ஹால் ஆஃப் ஃபேமாக அறிவிக்கப்பட்டனர்.[19][20]
பிறயன் லாறா தெ பிரின்ஸ் ஆஃப் போர்ட் ஆஃப் ஸ்பெயின் அல்லது தெ பிரின்ஸ் எனவும் அழைக்கப்பட்டார்.[21]