![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c6/TE-Collage_Brussels.png/640px-TE-Collage_Brussels.png&w=640&q=50)
பிரசெல்சு
From Wikipedia, the free encyclopedia
பிரசெல்சு (பிரெஞ்சு மொழி: Bruxelles, [bʁysɛl] (கேட்கⓘ); டச்சு: Brussel, [ˈbrʏsəɫ] (கேட்கⓘ)), உத்தியோக பூர்வமாக பிரசெல்சு பகுதி அல்லது பிரசெல்சு தலைநகரப் பகுதி[5][6] (பிரெஞ்சு மொழி: Région de Bruxelles-Capitale, டச்சு: Brussels Hoofdstedelijk Gewest), என்பது பெல்ஜியத்தின் தலைநகரமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்புத் தலைநகரமுமாகும். இதுவே பெல்ஜியத்தின் பாரிய நகரப் பகுதியாகும்.[7][8] இது பெல்ஜியத்தின் நீதித்துறைத் தலைநகரான பிரசெல்சு நகர் உட்பட 19 மாநகர சபைகளைக் கொண்டுள்ளது. பிரசெல்சு நகரில் "பெல்ஜியத்தின் பிரஞ்சுச் சமூகம்" மற்றும் "பிளெமிய சமூகம்" ஆகியன காணப்படுகின்றன.[9]
பிரசெல்சு
| |
---|---|
பெல்ஜியத்தின் பகுதி | |
| |
![]() பிரசெல்சின் பல்வேறு தோற்றங்கள், மேல்: நோர்தேர்ன் குவாட்டர் வணிக மாவட்டத்தின் காட்சி., 2வது இடது: கிரான்ட்பிளேசின் ஃப்ளோரல் கார்ப்பட் நிகழ்வு, 2வது வலது: பிரசெல்சு நகர மண்டபம் மற்றும் மொன்ட் டெஸ் ஆர்ட்ஸ் பகுதி, 3வது: ஐம்பதாண்டுப் பூங்கா, 4வது இடது: மான்னெக்கன் பிஸ், 4வது நடு: புனித மிக்கேல் மற்றும் புனித குடுலா தேவாலயம், 4வது வலது: காங்கிரசு தூண் கீழ்: பிரசெல்சின் அரச மாளிகை | |
அடைபெயர்(கள்): ஐரோப்பாவின் தலைநகரம்[1] நகைச்சுவை நகரம்[2][3] | |
![]() அமைவிடம்: பிரசெல்சு (red) – in the European Union (brown & light brown) | |
கவுன்டி | பெல்ஜியம் |
குடியேற்றம் | c. 580 |
நிறுவல் | 979 |
பகுதிகள் | 18 June 1989 |
அரசு | |
• அமைச்சுத் தலைவர் | ரூடி வெர்வூட்(2013–) |
• ஆள்பதி | ஜீன் கிளமன்ட் (2010–) |
• பாராளுமன்றத் தலைவர் | எரிக் தோமசு |
பரப்பளவு | |
• பகுதி | 161.38 km2 (62.2 sq mi) |
ஏற்றம் | 13 m (43 ft) |
மக்கள்தொகை | |
• பகுதி | வார்ப்புரு:Metadata Population BE |
• அடர்த்தி | 7,025/km2 (16,857/sq mi) |
• பெருநகர் | 18,30,000 |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
ISO 3166 | BE-BRU |
இணையதளம் | www.brussels.irisnet.be |
பிரசெல்சு சார்லமேனின் வழித்தோன்றல் ஒருவரால் 10ம் நூற்றாண்டில் ஒரு கோட்டை நகராக உருவாக்கப்பட்டு பின் ஒரு நகராக வளர்ச்சியடைந்துள்ளது.[10] இந்நகரின் சனத்தொகை 1.1 மில்லியனும் இதன் பெருநகர்ப்பகுதிச் சனத்தொகை 1.8 மில்லியனும் ஆகும். இது பெல்ஜியத்திலேயே பெரிய சனத்தொகையாகும்.[11][12] இரண்டாம் உலகப் போரின் முடிவு தொடக்கம் பிரசெல்சு சர்வதேச அரசியலின் முக்கிய மையமாகத் திகழ்கிறது. இது முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள்[13] மற்றும் வட அத்திலாந்திக் ஒப்பந்த அமையத்தின் தலைமையகம் ஆகியவற்றை கொண்டுள்ளதால் ஒரு பன்மொழிச் சமூகத்தை உருவாக்கியுள்ளதுடன் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அரசியல் வல்லுனர்கள் போன்றோரின் இருப்பிடமாகவும் விளங்குகிறது.[14]
வரலாற்று ரீதியாக டச்சு மொழி பேசும் மக்களைக் கொண்ட பிரசெல்சு, 1830ல் பெல்ஜியத்தின் விடுதலையைத் தொடர்ந்து பிரெஞ்சு மொழி பேசும் சமுதாயமாக மாறியுள்ளது. இன்று இந்நகர் அதிகார பூர்வமாக இருமொழி நகராகும். இங்கு காணப்படும் போக்குவரத்து அடையாளங்கள், வீதிகளின் பெயர்கள் மற்றும் பல்வேறு விளம்பர மற்றும் சேவைப் பதாகைகள் இவ்விரு மொழிகளையும் கொண்டுள்ளன.[15] இங்கு மொழி தொடர்பான முறுகல்கள் காணப்படுவதோடு, பிரசெல்சைச் சுற்றியுள்ள நகரங்களில் காணப்படும் மொழி தொடர்பான சட்டங்கள் பெல்ஜியத்தில் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன.