பழைய அசிரியப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பழைய அசிரியப் பேரரசு (ஆட்சிக் காலம்:கிமு 2025 - கிமு 1378) (Old Assyrian Empire) அசிரிய மக்களின் நான்கு கால கட்டங்களில் இருந்த பேரரசுகளில் இரண்டாவதாகும். பிற மூன்று கால கட்டங்களில் இருந்த அசிரிய இராச்சியங்கள் பண்டைய அசிரியா, மத்திய அசிரியப் பேரரசு மற்றும் புது அசிரியப் பேரரசுகள் ஆகும். பழைய அசிரியப் பேரரசின் தலைநகராக அசூர் மற்றும் டெல்-லெய்லான் எனும் சுபாத்-என்லில் நகரங்கள் விளங்கியது. பழைய அசிரியப் பேரரசு கிமு 2025 முதல் 1378 முடிய ஆண்டனர்.
பழைய அசிரியப் பேரரசு Aššūrāyu | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 2025 -–1378 | |||||||||||||
தலைநகரம் | அசூர் கிமு 2025 டெல்-லெய்லான் எனும் சுபாத்-என்லில் கிமு 1754 [1] அசூர், கிமு 1681 | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | அக்காதியம், சுமேரியம்(வீழ்ச்சியடைந்த காலம்) | ||||||||||||
சமயம் | பண்டைய மெசபதோமிய சமயங்கள் [2] | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
இஸ்சியாக் அசூர் | |||||||||||||
• கிமு 2025 | முதலாம் புசூர் - அசூர் (முதல்) | ||||||||||||
• கிமு 1378 | இரண்டாம் அசூர்- நடின் - அகே (இறுதி) | ||||||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||||||
• தொடக்கம் | கிமு 2025 - | ||||||||||||
• முடிவு | 1378 | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | சிரியா ஈராக் |
பண்டைய அண்மை கிழக்கில், யூப்ரடீஸ் - டைகிரீஸ் ஆறுகள் பாயும் மேல் மெசொப்பொத்தேமியாவில், தற்கால ஈராக் மற்றும் சிரியாவில் வாழ்ந்த அசிரியர்கள் கிழக்கு செமிடிக் மொழியான அக்காதியம் பேசினர்.
நாகரீகங்களின் தொட்டில் எனப்போற்றப்படும் மெசொப்பொத்தேமியாவில் சுமேரியாவின் அக்காடியப் பேரரசு, பாபிலோன், அசிரியா இராச்சியங்கள் கலை, பண்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்ந்த நிலையில் இருந்தன.
பழைய அசிரியப் பேரரரசு உச்சத்தில் இருந்த போது கிழக்கில் தற்கால ஆர்மீனியா, அஜர்பைஜன், மற்றும் ஈரான், ஈராக், சிரியா, தெற்கில் அரேபியத் தீபகற்பம், மேற்கில் சைப்பிரஸ், பண்டைய எகிப்து, பண்டைய லிபியா ஆகிய பகுதிகளில் அசிரியர்களின் ஆட்சியில் இருந்தது.[3]
முந்தைய அக்காடியப் பேரரசில் சிறு நகரமாக இருந்த அசூர் நகரத்தில் கிமு 2600ல் அசிரிய மக்கள் கோயில்கள், அரண்மனைகள், நகரச் சதுக்கங்கள் கட்டி, அதனை தமது இராச்சியத்திற்கு பெயராகவும், தலைநகரமாகவும் கொண்டனர். அசூர் நகரம் நிறுவுவதற்கு முன்னர் அசிரியாவை சுபர்த்து என்றும் சாசானியப் பேரரசில் அசோரிஸ்தான் எனவும் அழைக்கப்பட்டது.
பழைய அசிரியப் பேரரசர் இலு - சுமா காலத்தில் தற்கால துருக்கி மற்றும் சிரியாவின் அனதோலியா, லெவண்ட் மற்றும் மெசொப்பொத்தேமியாவின் தெற்கின் பாபிலோனியப் பகுதிகளில் அசிரியர்களின் குடியிருப்புகள் ஏற்படுத்தினர்.
மெசொப்பொத்தேமியாவில் கிமு 2450ல் அசிரியர்கள், சுமேரியர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். அசிரிய மக்களின் முதல் கோயிலை அசூர் நகரத்தில் அசிரியப் பேரரசர் உஷ்பியா கிமு 2050ல் நிறுவினார். பின்னர் நகரத்துடன் அசூர் கோயிலைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் எழுப்பப்பட்டது.
கிமு 2500 - 2400க்கு இடைப்பட்ட காலத்தில் கால்நடைகள் மேய்க்கும் நாடோடி இன மக்களாக இருந்த அசிரியர்கள், அனதோலியாவின் ஹட்டியர்கள் மற்றும் உரியர்கள், மற்றும் ஈலாம் பகுதியின் குடியன், லுல்லுபி மற்றும் அமோரிட்டு இன மக்களிடம் பகை பாராட்டினர்.[4]
கிமு 2400ல் சுமேரிய மக்கள் அக்காடியப் பேரரசின் அசிரிய-பாபிலோனிய குடிமக்கள் ஆயினர்.[5][6] கிமு 2025ல் அசிரியர்கள் மொசபதோமியாவில் பழைய அசிரியப் பேரரசை நிறுவினர்.
பழைய அசிரியப் பேரரசுக்கும், மத்திய அசிரியப் பேரரசுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிமு 1475 முதல் கிமு 1275 முடிய மித்தானியர்கள் அசிரியர்களின் பேரரசைக் கைப்பற்றி ஆண்டனர்.
பழைய அசிரியப் பேரரசர்களின் பட்டியல்:[7]
பழைய அசிரியப் பேரரசர்கள் | ||
மன்னரின் பெயர் | ஆட்சிக் காலம்[8][9] | குறிப்புகள்[8][9] |
---|---|---|
முதலாம் எரிஸ்கும் | fl. கிமு 1905 — கிமு 1867 (30 அல்லது 40 ஆண்டுகள்) | இலு-சுமாவின் மகன்; அசூர் நகரத்தில் கோயிலை எழுப்பியவன் |
குனும் | fl. கிமு 1867 — 1860 | இலு-சுமாவின் மகன் |
முதலாம் சர்கோன் | இகுனுவின் மகன் | |
இரண்டாம் புசூர் - அசூர் | முதலாம் சர்கோனின் மகன் | |
நரம் - சுயின் | இரண்டாம் புசூர் - அசூரின் மகன் | |
இரண்டாம் எரிசும் | நரம் - சுயினின் மகன் | |
முதலாம் ஷாம்சி - அதாத் | கிமு 1700 (33 ஆண்டுகள்) | பாபிலோனிய]] மன்னர் அம்முராபி]]யால் வெல்லப்பட்டார். |
முதலாம் இஷ்மி - தகான் | (40 ஆண்டுகள்) | முதலாம் ஷாம்சி - அதாத்தின் மகன் |
முத் - அஷ்குர் | முதலாம் இஷ்மி - தகானின் மகன், ஹுரியன் நாட்டு இளவரசியை மணந்தவன்.[10] | |
ரிமூஷ் | ||
அசினும் | முதலாம் அஷாம்சி - அதாத்தின் பேரன் | |
மற்ற ஏழு அரசர்கள்:
|
||
பெல் - பானி | (10 ஆண்டுகள்) | அதாசியின் மகன் |
லிபாயா | (17 ஆண்டுகள்) | பெல் -பானியின் மகன் |
முதலாம் சர்மா - அதாத் | (12 ஆண்டுகள்) | லிபாயாவின் மகன் |
இப்தர் - சின் | (12 ஆண்டுகள்) | முதலாம் சர்மா - அதாத்தின் மகன் |
பசாயா | (28 ஆண்டுகள்) | இப்தர் சுயானின் மகன் |
லுல்லாயா | (6 ஆண்டுகள்) | |
சூ - நினுவா | (14 ஆண்டுகள்) | பசாயாவின் மகன் |
இரண்டாம் சர்மா - அதாத் | (3 years) | சு - நினுவாவின் மகன் |
மூன்றாம் எரிசும் | (13 ஆண்டுகள்) | சு - நினுவாவின் மகன் |
இரண்டாம் சாம்சி - அதாத் | (6 ஆண்டுகள்) | மூன்றாம் எரிசும்மின் மகன |
இரண்டாம் இஷ்மி - தகான் | (16 ஆண்டுகள்) | இரண்டாம் சாம்சி - அதாத்தின் மகன் |
மூன்றாம் சாம்சி - அதாத் | (16 ஆண்டுகள்) | சர்மா - அதாத்தின் உடன்பிறப்பு |
முதலாம் அசூர் - நிராரி | (26 ஆண்டுகள்) | இஷ்மி-தகான் |
மூன்றாம் புசூர் - அசூர் | (24 அல்லது 14 ஆண்டுகள்) | முதலாம் அசூர் - நிராரியின் மகன் |
முதலாம் என்லில் - நசிர் | (13 ஆண்டுகள்) | மூன்றாம் புசூர் - அசூரின் மகன் |
நூர் - இலி | (12 ஆண்டுகள்) | முதலாம் என்லில் நசிரின் மகன் |
அசூர் - சாதுனி | (1 மாதம்) | நூர் -இலியின் மகன் |
முதலாம் அசூர் - ரப்பி | இனில் நசிரின் மகன் | |
முதலாம் அசூர் - நதின் - அகே | (damaged text) | முதலாம் அசூர் ரபியின் மகன் |
இரண்டாம் என்லில் - நசிர் | கிமு 1420–1415 | |
இரண்டாம் அசூர் - நிராரி | கிமு 1414–1408 | இரண்டாம் என்லில் - நசிரின் மகன் |
அசூர்-பெல்-நிசேசு | கிமு 1407–1399 | இரண்டாம் அசூர் நிராரியின் மகன் |
அசூர் - ரிம்- நிசேசு | கிமு 1398–1391 | அசூர்- பெல் - நிசேசு |
இரண்டாம் அசூர் - நதின் -அகே | கிமு 1390–1381 | அசூர் - ரிம் - நிசேசுவின் மகன் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.