1963ஆம் ஆண்டு திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
'நீங்காத நினைவு' , 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டபிள்யூ. ஆர். சுப்பாராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர். தீதார் என்ற 1951 ஆம் ஆண்டு வெளியான இந்திப் படத்தின், தமிழ்ப் பதிப்பே இத்திரைப்படமாகும்.[1]
நீங்காத நினைவு | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | டபிள்யூ. ஆர். சுப்பாராவ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி |
வெளியீடு | மார்ச்சு 15, 1963 |
நீளம் | 4411 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். வாலி, அ. மருதகாசி, கண்ணதாசன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் பாடல்களை இயற்றினர். பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.
நேற்று வந்து, இன்றிருந்து, நாளை போகும்.. என்ற பாடலே, டி. எம். சௌந்தரராஜன் பாடிய, முதல், வாலியின் பாடலாகும்.[2]
நௌஷாத் இசையமைத்த, இந்தி பாடலின் மெட்டில் அமைந்த, "ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே".. என்ற பாடல் பிரபலமடைந்தது.[1]
எண். | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு (mm:ss) |
---|---|---|---|---|
1 | ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே.. | பி. சுசீலா & எல். ஆர். ஈஸ்வரி | வாலி | 03:04 |
2 | நேற்று வந்து, இன்றிருந்து, நாளை போகும்.. | டி. எம். சௌந்தரராஜன் | 03:24 | |
3 | ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே.. - குறும்பாடல் | 01:17 | ||
4 | பார்த்ததுண்டா, கேட்டதுண்டா.. | குழுவினருடன், எல். ஆர். ஈஸ்வரி | அ. மருதகாசி | 02:28 |
5 | கண் பார்வை கவி பாடும்.. | பி. சுசீலா | 03:26 | |
6 | எங்கிருந்த போதும் உனை மறக்கமுடியுமா.. | 03:08 | ||
7 | உன் கதையும் என் கதையும்.. | டி. எம். சௌந்தரராஜன் | 03:19 | |
8 | அன்பு வாழ்க, ஆசை வாழ்க.. | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | கண்ணதாசன் | 03:22 |
9 | கதையை கேட்டதும் மறந்துவிடு.. | பி. பி. ஸ்ரீநிவாஸ் | கொத்தமங்கலம் சுப்பு | 04:09 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.