நள சோப்ரா (Nala sopara), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய்-விரார் மாநகராட்சியின் பகுதியாக தற்போது உள்ளது. பண்டைய இந்தியாவை ஆண்ட சாதவாகனர் ஆட்சியில் இந்நகரம் முக்கிய நிர்வாக மையமாகவும், பௌத்த சமயத்தின் புகழிடமாகவும் திகழ்ந்தது. நளசோப்ராவில் அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டு உள்ளது.

விரைவான உண்மைகள் நளசோப்ரா, நாடு ...
நளசோப்ரா
நகரம்
அடைபெயர்(கள்): சோப்ரா
Thumb
நளசோப்ரா
நளசோப்ரா
Thumb
நளசோப்ரா
நளசோப்ரா
ஆள்கூறுகள்: 19.4154°N 72.8613°E / 19.4154; 72.8613
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்பால்கர்
நகரம்வசாய்-விரார்
அரசு
  வகைமாநகராட்சி
  நிர்வாகம்வசாய்-விரார் மாநகராட்சி [1]
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்4.6 lakh
மொழிகள்
  அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
401 209(கிழக்கிற்கு) 401 203(for west)
தொலைபேசி குறியீடு0250
வாகனப் பதிவுMH48
சட்டமன்றத் தொகுதிநளசோப்ரா
மூடு

சோப்ரா தொல்லியல் களம்

Thumb
நள சோப்ராவின் பௌத்த தூபி
Thumb
கௌதம புத்தரின் சிலை, நள சோப்ரா

கல்வெட்டுயியல் மற்றும் தொல்லியல் அறிஞருமான பகவால்லால் இந்திரஜித் என்பவர் நள சோப்ரா அருகில் உள்ள மெர்தெஸ் எனும் கிராமத்தின் தொல்லியல் களத்தை 1982-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்த போது, சிதிலமடைந்த பௌத்த தூபியின் அருகில், கிபி 8-9வது நூற்றாண்டு காலத்திய பெரிய அளவிலான வெண்கலப் பேழையில் 8 மைத்திரேயர் செப்புச் சிலைகளையும், தங்கப் பூக்களையும், பிட்சைப் பாத்திரங்களையும் மற்றும் சாதவாகனப் பேரரசர் கௌதமிபுத்ர சதகர்ணியின் நாணயத்தையும் கண்டுபிடித்தார்.

நளசோப்ரா தொல்லியல் களத்தை இந்தியத்தொல்லியல் ஆய்வகத்தின் ஆய்வாளர் எம். எம். குரேஷி 1939-1940களில் அகழாய்வு செய்த போது,இரண்டு சிறிய தூபிகளை கண்டெடுத்தார்.[2]1956-ஆம் ஆண்டில் மீண்டும் அகழாய்வு செய்த போது 11-வது நூற்றாண்டின் அசோகரின் பெரிய பாறைக் கல்வெட்டு துண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.[3]1993-இல் அகழாய்வு செய்த போது, வட்ட வடிவக் கிணறும், பண்டைய ரோமானியர்களின் மெருகூட்டப்பட்ட காவி நிறக் குடுவைகளும், கண்ணாடித் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

அசோகரின் எட்டாவது பெரும் பாறைக் கல்வெட்டு

Thumb
அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டு, நள சோப்ரா
Thumb
அசோகர் கல்வெட்டின் நகல் (பிராமி எழுத்தில்), நள சோப்ரா

ஏ. எல். பசாம் என்பவர் நள சோப்ராவின் அசோகரின் எட்டாவது பெரும் பாறைக் கல்வெட்டின் குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுத்துபெயர்ப்பு செய்தார்.[4]இக்கல்வெட்டில் பேரரசர் அசோகர், புத்தர் அருளிய மக்கள் அறவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் செய்யவேண்டிய அறச்செயல்கள் குறித்துள்ளார். அசோகர் தம்மை தேவனாம் பிரியதர்சி ("Devanampiya") (Beloved of The Gods) என்றும் பிரியதசி ("Piyadassi" ) (The handsome one) என்றும் குறித்துள்ளார்.

Thumb
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
'''மஸ்கி'''
'''மஸ்கி'''
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri
Yerragudi
Yerragudi
'''சாசாராம்'''
'''சாசாராம்'''

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.