![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Najib_Razak_2008-08-21.jpg/640px-Najib_Razak_2008-08-21.jpg&w=640&q=50)
நஜீப் ரசாக்
From Wikipedia, the free encyclopedia
முகமது நஜிப் பின் துன் ஹாஜி அப்துல் ரசாக் (Mohd Najib bin Tun Haji Abdul Razak; சீனம்: 纳吉·阿都拉萨; பிறப்பு: ஜூலை 23, 1953) மலேசியாவின் அரசியல்வாதியும் மலேசியாவின் ஆறாவது பிரதமரும் ஆவார். 2004 சனவரி 7 ஆம் நாளில் இருந்து மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த இவர் 2009, ஏப்ரல் 3 ஆம் நாளில் இருந்து பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நஜீப் ரசாக் Najib Razak 纳吉·阿都拉萨 | |
---|---|
![]() | |
6-வது மலேசியப் பிரதமர் | |
பதவியில் 3 ஏப்ரல் 2009 – 10 மே 2018 | |
ஆட்சியாளர்கள் | மிசான் சைனல் அபிதீன் அப்துல் ஆலிம் ஐந்தாம் முகம்மது |
Deputy | முகியுதீன் யாசின் அகமது சாயிது அமீது |
முன்னையவர் | அப்துல்லா அகுமது பதவீ |
பின்னவர் | மகாதீர் பின் முகமது |
அம்னோ தலைவர் | |
பதவியில் 26 மார்ச் 2009 – 12 மே 2018 | |
Deputy | முகியுதீன் யாசின் அகமது சாயிது அமீது |
முன்னையவர் | அப்துல்லா அகுமது பதவீ |
பின்னவர் | அகமது சாயிது அமீது (பதில்) |
நிதி அமைச்சர் | |
பதவியில் 23 செப்டம்பர் 2008 – 10 மே 2018 | |
பிரதமர் | அப்துல்லா அகுமது பதவீ இவரே |
முன்னையவர் | அப்துல்லா அகுமது பதவீ |
பின்னவர் | லிம் குவான் எங் |
9-வது மலேசிய துணைப் பிரதமர் | |
பதவியில் 7 சனவரி 2004 – 3 ஏப்ரல் 2009 | |
பிரதமர் | அப்துல்லா அகுமது பதவீ |
முன்னையவர் | அப்துல்லா அகுமது பதவீ |
பின்னவர் | முகியுதீன் யாசின் |
12-வது பகாங் அரசுத்தலைவர் | |
பதவியில் 4 மே 1982 – 14 ஆகத்து 1986 | |
முன்னையவர் | அப்துல் ரசீத் அப்துல் ரகுமான் |
பின்னவர் | காலில் யாக்கோபு |
மலேசிய பன்னாட்டு இசுலாமியப் பல்கலைக்கழகத் தலைவர் | |
பதவியில் 1998–1999 | |
அதிபர் | அகமது சா |
முன்னையவர் | அன்வர் இப்ராகீம் |
பின்னவர் | சானுசி யூனித் |
மலேசியா நாடாளுமன்றம் for பெக்கான் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 6 அக்டோபர் 1986 | |
முன்னையவர் | முகமது அமீன் தாவூத் |
பதவியில் 21 பெப்ரவரி 1976 – 29 மார்ச் 1982 | |
முன்னையவர் | அப்துல் ரசாக் உசேன் |
பின்னவர் | முகமது அமீன் தாவூது |
பகாங் மாநில சட்டமன்ற உறுப்பினர், பந்தார் பெக்கான் தொகுதி | |
பதவியில் 22 ஏப்ரல் 1982 – 3 ஆகத்து 1986 | |
முன்னையவர் | சாம்சியா அப்துல் அமீது |
பின்னவர் | எவருமில்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முகமது நஜீப் பின் அப்துல் ரசாக் 23 சூலை 1953 (1953-07-23) (அகவை 70) கோலா லிப்பிஸ், மலாயா |
அரசியல் கட்சி | அம்னோ - தேசிய முன்னணி (1976–) |
துணைவர்(கள்) | சாயினா எசுக்காந்தர் (1976–1987) ரோசுமா மன்சோர் (1987–இன்று) |
பிள்ளைகள் | 5 |
வாழிடம் | கோலாலம்பூர் |
முன்னாள் கல்லூரி | நொட்டிங்காம் பல்கலைக்கழகம் |
கையெழுத்து | ![]() |
இணையத்தளம் | www |
நஜிப் துன் ரசாக் மலேசியாவின் 2ஆவது பிரதமர் அப்துல் ரசாக்கின் மகனாவார். மலேசியாவில் மிகவும் இளம் வயதில் எம்.பி ஆன முதல் நபர் என்ற பெருமையும் நஜீப்க்கு உண்டு. தந்தையின் மறைவைத் தொடர்ந்து 22ஆம் வயதில் பெகான் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
9 மே 2018 வரை இவர் மலேசியாவின் 6ஆவது பிரதமராகப் பொறுப்பு வகித்தார். 9 மே 2018இல் நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத்தில் அதி பெரும்பான்மையைத் தக்கவைக்க தவறியதால் பக்கத்தான் கூட்டணியிடம் ஆட்சி மாற்றம் நடந்தது. இதனைத் தொடர்ந்து மகாதீர் பின் முகமது 7ஆவது மலேசிய பிரதமராக 10 மே 2018இல் பதவியேற்றார்.
2018 சூலை 3 இல் நஜீப் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். 1எம்டிபி என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய எஸ்.ஆர்.சி இடர்நேசனல் என்ற நிறுவனத்தில் இருந்து RM42 மில்லியன் ($10.6 மில்.) பணம் நஜீபின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிடப்பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.[2][3] இது குறித்த விசாரணைகளை அடுத்து, அதிகார வன்முறை, நம்பிக்கை மற்றும் பணமோசடி குற்றவியல் மீறல் மற்றும் 1எம்டிபி நிறுவனத்தின் கணக்காய்வு அறிக்கையில் தலையிட்டமை போன்ற பல குற்றச்சாட்டுகள் நஜீப் மீது சுமத்தப்பட்டன.[4][5][6][7] 2020 சூலை 28 இல், அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உட்பட ஏழு குற்றச்சாட்டுகளில் மலேசிய உயர் நீதிமன்றம் நஜிப்பை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முதலாவது மலேசியப் பிரதமராக நஜீப் அறிவிக்கப்பட்டார்,[8][9] இவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில். மலேசிய ரிங்கிட் தண்டமும் அறிவிக்கப்பட்டது.[10][11]