தெமர்லோ மாவட்டம்
மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
(இது தெமர்லோ மாவட்டம் தொடர்பான கட்டுரை. தெமர்லோ நகரம் குறித்த கட்டுரைக்கு தெமர்லோ நகரம் என்பதைச் சொடுக்கவும்.)
விரைவான உண்மைகள் தெமர்லோ மாவட்டம், நாடு ...
தெமர்லோ மாவட்டம் | |
---|---|
Daerah Temerloh | |
![]() தெமர்லோ மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 3°22′N 102°25′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
தொகுதி | தெமர்லோ |
உள்ளூராட்சி | தெமர்லோ நகராண்மைக் கழகம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | பாட்சி கெனாலி[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,251 km2 (869 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,57,562 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 28xxx |
மலேசியத் தொலைபேசி | +6-09 |
மலேசியப் போக்குவரத்து எண் | C |
மூடு
தெமர்லோ மாவட்டம் (ஆங்கிலம்: Temerloh District; மலாய்: Daerah Temerloh; சீனம்: 淡马鲁县; ஜாவி: ايره تمرلوه ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கோலாலம்பூரில் இருந்து சுமார் 130 கி.மீ. தூரத்தில் இந்த மாவட்டம் அமைந்து உள்ளது.
தெமர்லோ மாவட்டம்; கிழக்கில் மாரான் மாவட்டம், மேற்கில் பெந்தோங் மாவட்டம், வடக்கில் ஜெராண்டுட் மாவட்டம் மற்றும் தெற்கில் பெரா மாவட்டம் ஆகிய மாவட்டங்களை எல்லையாகக் கொண்டு உள்ளது.
குவாந்தான் மாநகருக்கு அடுத்த மிகப் பெரிய பட்டணமாக தெமர்லோ நகரம் விளங்குகிறது. மாநகர் ஆட்சியின் கீழ் உள்ள தெமர்லோ மாவட்டம், மெந்தகாப், லஞ்சாங், கோலா கெராவ், மற்றும் கெர்டாவ் ஆகிய பட்டணங்களை உள்ளடக்கியது.