மெந்தகாப்
From Wikipedia, the free encyclopedia
மெந்தகாப் என்பது (மலாய்: Mentakab; ஆங்கிலம்: Mentakab; சீனம்: 文德甲) மலேசியா, பகாங் மாநிலத்தில், தெமர்லோ மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். இந்த நகரம் முன்பு பாசிர் ராவா என்று அழைக்கப்பட்டது. பின்னர் பெயர் மாற்றம் பெற்று மெந்தகாப் என்று அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் மெந்தகாப், நாடு ...
மெந்தகாப் | |
---|---|
Mentakab | |
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°29′N 102°21′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | தெமர்லோ மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
மலேசியத் தொலைபேசி எண் | +60-9-2 (தரைவழித் தொடர்பு) |
வாகனப் பதிவு | C |
மூடு
இந்த நகரம் தெமர்லோ, லஞ்சாங், கம்போங் துவாலாங், மெங்காராக், மற்றும் கெர்டாவ் ஆகிய வட்டாரங்களுக்கு அருகில் உள்ளது. 1901-ஆம் ஆண்டு இந்த நகரை மாநிலத் தலைநகராக நியமிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்தது. இருப்பினும் நிலப் பற்றாக் குறையினால், குவாந்தான் நகரை மாநிலத் தலைநகராக நியமித்தது.