![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/09/Pope_Francis_Korea_Haemi_Castle_19_%2528cropped%2529.jpg/640px-Pope_Francis_Korea_Haemi_Castle_19_%2528cropped%2529.jpg&w=640&q=50)
திருத்தந்தை பிரான்சிசு
கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை / From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தை பிரான்சிசு (/ˈfræns[invalid input: 'ɨ']s/, /ˈfrɑːns[invalid input: 'ɨ']s/; ஆங்கில மொழி: Francis இலத்தீன்: Franciscus இயற்பெயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ பி. 17 டிசம்பர் 1936) கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை ஆவார். இவர் 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வத்திக்கான் நகரின் தலைவரும் ஆவார். இவர் அர்ஜென்டீனா நாட்டைச் சார்ந்தவர். புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியவர்.
திருத்தந்தை பிரான்சிசு சே.ச | |
---|---|
266ஆம் திருத்தந்தை | |
![]() | |
ஆட்சி துவக்கம் | 13 மார்ச் 2013 |
முன்னிருந்தவர் | பதினாறாம் பெனடிக்ட் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 13 டிசம்பர் 1969 ரமோன் ஹொசே கஸ்தெல்லானோ-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | 27 ஜூன் 1992 அந்தோனியோ குவாராசீனோ-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 21 பெப்ரவரி 2001 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ஹோர்கே மாரியோ பெர்கோலியோ |
பிறப்பு | 17 திசம்பர் 1936 (1936-12-17) (அகவை 87) புவேனோஸ் ஐரேஸ், அர்ஜென்டீனா |
குடியுரிமை | வத்திக்கான் குடியுரிமையுடைய அர்கெந்தீனர் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
இல்லம் | வத்திக்கான் நகர் |
குறிக்கோளுரை | எளியவராயினும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்[1] |
கையொப்பம் | ![]() |
தென்னமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை இவரே. மேலும், இயேசு சபையிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவர் ஆவார். மூன்றாம் கிரகோரிக்கு பின்பு கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.[2] 913இல் திருத்தந்தை லாண்டோவுக்குப் பின்பு தனக்கு முன் இருந்த திருத்தந்தையரின் பெயரை தனது ஆட்சிப்பெயராகத் தெரிவு செய்யாத இரண்டாம் திருத்தந்தை இவர் ஆவார்.
இவர் தம் தாய்மொழியாகிய எசுப்பானியம், தம் பெற்றோரின் பூர்வீக மொழியான இத்தாலியம் மற்றும் இலத்தீன், செருமானியம், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளை நன்கு பேச அறிந்தவர்.[3]
2005ஆம் ஆண்டு நடந்த திருத்தந்தைத் தேர்தல் அவையில் பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அப்போது கர்தினால்-வாக்காளராகத் தேர்தலில் பங்கேற்ற பெர்கோலியோவுக்கு 40 வாக்குகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.[4] ஆயினும் கர்தினால் பெர்கோலியோ தமக்குத் திருத்தந்தைப் பதவிக்காக வாக்குகள் அளிக்க வேண்டாம் என்று உடன் கர்தினால்மார்களிடம் அழாக்குறையாகக் கேட்டுக்கொண்டதாகச் சில செய்திகள் கூறுகின்றன.[5]