ஜூலியா கிலார்ட்
From Wikipedia, the free encyclopedia
ஜூலியா ஐலீன் கிலார்ட் (Julia Eileen Gillard, பிறப்பு: செப்டம்பர் 29, 1961) ஆஸ்திரேலியாவின் 27வது பிரதமரும், ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமரும் ஆவார். இவர் 2010, ஜூன் 24 ஆம் நாள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜூலியா கிலார்ட் Julia Gillard | |
---|---|
ஆஸ்திரேலியாவின் 27வது பிரதமர் | |
பதவியில் 24 ஜூன் 2010 – 27 ஜூன் 2013 | |
Deputy | உவைன் சுவான் |
முன்னையவர் | கெவின் ரட் |
பின்னவர் | கெவின் ரட் |
ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவர் | |
பதவியில் 24 ஜூன் 2010 – 27 ஜூன் 2013 | |
முன்னையவர் | கெவின் ரட் |
பின்னவர் | கெவின் ரட் |
ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 அக்டோபர் 1998 | |
பிரதமர் | கெவின் ரட் |
முன்னையவர் | பாரி ஜோன்ஸ் |
நாடாளுமன்ற உறுப்பினர் for லேலோர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 செப்டம்பர் 1961 (1961-09-29) (அகவை 62) பாரி, வேல்ஸ், ஐக்கிய இராச்சியம் |
அரசியல் கட்சி | ஆஸ்திரேலியத் தொழிற்கட்சி |
வாழிடம்(s) | ஆல்ட்டோனா, விக்டோரியா[1] |
முன்னாள் கல்லூரி | மெல்பேர்ண் பல்கலைக்கழகம் அடிலெயிட் பல்கலைக்கழகம் |
இவர் ஆஸ்திரேலியத் தொழிற்கட்சியின் தலைவராக 2010 ஜூன் 24 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில் அவர் நாட்டின் பிரதமராகவும் பதவியேற்றார். இவர் முன்னர் கெவின் ரட்டின் அரசில் உதவிப் பிரதமராகப் பதவியில் இருந்தவர்.
1915 முதல் 1923 வரை பிரதமராக இருந்த பிலி ஹியூசிற்குப் பின்னர் வெளிநாட்டில் பிறந்த ஒருவர் நாட்டின் பிரதமராக வருவது இதுவே முதற் தடவையாகும்[2][3][4]. அண்மைக்காலத்தில் கெவின் ரட்டின் செல்வாக்கு நாட்டில் குறைந்து வந்ததன் காரணமாக அவர் கட்சித் தலைமையில் இருந்து விலக அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்த அவர் 2010 ஜூன் 24 இல் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.