சுசுமிதா தேவ்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சுசுமிதா தேவ் (Sushmita Dev)(பிறப்பு 25 செப்டம்பர் 1972) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மக்களவை மேனாள் உறுப்பினரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவர். முன்னதாக, இவர் 2014 இந்திய பொதுத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக அசாமின் சில்சார் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் அகில இந்திய மகளிர் காங்கிரசின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராஜ்தீப் ராயிடம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால் இவர் இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து விலகி 2021-ல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார் [4]
விரைவான உண்மைகள் சுசுமிதா தேவ், நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை ...
சுசுமிதா தேவ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 அக்டோபர் 2021 | |
முன்னையவர் | மன்னாசு புனியா |
தொகுதி | மேற்கு வங்காளம் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 16 மே 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | கபீந்திர புர்கயாசுதா |
பின்னவர் | இராஜ்தீப் ராய் |
தொகுதி | சில்சார், அசாம் |
அசாம் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் மே 2011 – 16 மே 2014 | |
முன்னையவர் | பிகிதா தேவ் |
பின்னவர் | திலீப் குமார் பால் |
தொகுதி | சில்சார் |
தலைவர்-அகில இந்திய மகளிர் காங்கிரசு | |
பதவியில் 9 செப்டம்பர் 2017 – 16 ஆகத்து 2021[1] | |
முன்னையவர் | சோபா ஒசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 செப்டம்பர் 1972 (1972-09-25) (அகவை 51) சில்சார், அசாம், இந்தியா |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2021 முதல்)[2] |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2021 வரை) |
பெற்றோர்s |
|
வாழிடம் | சில்சார் |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் (இளங்கலை, எல். எல். பி. மன்னர் கல்லூரி, இலண்டன் (எல். எல். எம்) |
வேலை | அரசியல்வாதி |
மூலம்: |
மூடு