சுகோய்
From Wikipedia, the free encyclopedia
சுகோய் (Sukhoi) என்பது வானூர்தி தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் ஈடுபட்டுள்ள ஒரு உருசிய (முன்னர் சோவியத்) தொழில்நுட்ப நிறுவனமாகும்.[2] மாஸ்கோவின் பெகோவோய் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனமானது மக்கள் போக்குவரத்து மற்றும் இராணுவ பயன்பாட்டிற்காக வானூர்திகளை வடிவமைக்கிறது.
விரைவான உண்மைகள் வகை, நிலை ...
![]() | |
சுகோய் நிறுவனத்தின் தலைமையகம் | |
வகை | கூட்டு-பங்கு நிறுவனம் |
---|---|
நிலை | ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது |
நிறுவுகை | 1939; 85 ஆண்டுகளுக்கு முன்னர் (1939) |
நிறுவனர்(கள்) | பாவெல் சுகோய் |
தலைமையகம் | பெகோவோய் மாவட்டம், மாஸ்கோ, உருசியா |
முதன்மை நபர்கள் | பாவெல் சுகோய் (நிறுவனர்) |
தொழில்துறை |
|
உற்பத்திகள் |
|
பணியாளர் | 26,177 (2011)[1] |
தாய் நிறுவனம் | யுனைடெட் ஏர்க்ராப்ட் கார்ப்பரேஷன் (ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம்) |
இணையத்தளம் | sukhoi.org |
மூடு
இந்த நிறுவனம் சோவியத் ஒன்றியத்தில் பாவெல் சுகோயால் 1939 ஆம் ஆண்டில் சுகோய் வடிவமைப்பு பணியகம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. பிப்ரவரி 2006 இல், உருசிய அரசாங்கம் மிகோயன், இல்யூசின், இர்குட், துபோலேவ் மற்றும் யாகோவ்லேவ் ஆகிய நிறுவனங்களுடன் சுகோயை இணைத்து யுனைடெட் ஏர்க்ராப்ட் கார்ப்பரேஷன் (ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம்) என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தை அமைத்தது.[3]