சுகோய் எஸ்யு-27 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது உருசிய நாட்டின் சுகோய் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்ற இரட்டைப் பொறி கொண்ட நான்காம் தலைமுறை சண்டை வானூர்தியாகும். பன்முகச் சண்டை வானூர்தியான இது வான் ஆளுமை, இடைமறிப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.[2][3]

விரைவான உண்மைகள் எஸ்யு-27 Su-27, வகை ...
எஸ்யு-27
Su-27
Thumb
எஸ்யு-27 (2005)
வகை பன்முகச் சண்டை வானூர்தி
உருவாக்கிய நாடு சோவியத் ஒன்றியம்/உருசியா
வடிவமைப்பாளர் சுகோய்
முதல் பயணம் 20 மே 1977; 47 ஆண்டுகள் முன்னர் (1977-05-20)
அறிமுகம் 22 சூன் 1985; 39 ஆண்டுகள் முன்னர் (1985-06-22)
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர் உருசிய வான் படை
உற்பத்தி 1982–2010
தயாரிப்பு எண்ணிக்கை 680[1]
மாறுபாடுகள் சுகோய் எஸ்யு-30
சுகோய் எஸ்யு-35
மூடு

1985 இல் சோவியத் வான்படையில் இந்த வானூர்தி அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க குண்டுவீசும் வானூர்திகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கவும், சோவியத் கடற்கரை பகுதிகளை எதிரி நாடு வானூர்தி தாங்கிக் கப்பல்களிடமிருந்து பாதுகாக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. மேலும் சோவியத் வான்படையின் கனரக படைத்துறை வானூர்திகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் இவை செயல்படுத்தப்பட்டன.[4] பின்னாட்களில் இந்த வானூர்தியை மையமாக கொண்டு சுகோய் எஸ்யு-30 மற்றும் சுகோய் எஸ்யு-35 போன்ற பல வானூர்திகள் உருவாக்கப்பட்டன.

விவரக்குறிப்புகள்

Thumb
வரைபடம்

தரவு எடுக்கப்பட்டது: [5][6][7][8]

பொது இயல்புகள்

  • குழு: 1
  • நீளம்: 21.9 m (71 அடி 10 அங்)
  • இறக்கை விரிப்பு: 14.7 m (48 அடி 3 அங்)
  • உயரம்: 5.92 m (19 அடி 5 அங்)
  • இறக்கைப் பரப்பு: 62 m2 (670 sq ft)
  • வெற்றுப் பாரம்: 16,380 kg (36,112 lb)
  • மொத்தப் பாரம்: 23,430 kg (51,654 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 30,450 kg (67,131 lb)
  • எரிபொருள் கொள்ளவு: 9,400 kg (20,723.5 lb)
  • சக்தித்தொகுதி: 2 × சாட்டர்ன் ஏஎல்31எப் தாரை பொறி (பின்னெரியுடன்), 75.22 kN (16,910 lbf) உந்துதல் தலா

செயற்பாடுகள்

  • அதிகபட்ச வேகம்: 2,500 km/h (1,553 mph; 1,350 kn)
  • அதிகபட்ச வேகம்: மாக் 2.35
  • வரம்பு: 3,530 km (2,193 mi; 1,906 nmi)
  • உச்சவரம்பு 19,000 m (62,336 அடி)
  • ஈர்ப்பு விசை வரம்பு: +9

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.