சிரம்பான் மாவட்டம்
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சிரம்பான் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Seremban; ஆங்கிலம்: Seremban District; சீனம்: 芙蓉县) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். சிரம்பான் மாவட்டத்தின் முக்கிய நகரம் சிரம்பான் (Seremban) நகரம். அதுவே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.
விரைவான உண்மைகள் சிரம்பான் மாவட்டம், நாடு ...
சிரம்பான் மாவட்டம் | |
---|---|
Seremban District | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°45′N 101°55′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | சிரம்பான் |
தொகுதி | சிரம்பான் |
உள்ளூராட்சி | சிரம்பான் மாநகர் மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 935.02 km2 (361.01 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 6,20,100 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 70xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-06 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
மூடு
கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 54 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 86 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும்; அமைந்து உள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒரு மாவட்டம் ஆகும்.