சிம்பாங் அம்பாட்
From Wikipedia, the free encyclopedia
சிம்பாங் அம்பாட் (மலாய்: Simpang Ampat; ஆங்கிலம்: Simpang Ampat; சீனம்: 新邦安拔; சாவி: سيمڤڠ امڤات) என்பது மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District), பத்து காவான் மக்களவை தொகுதியில் (Bukit Mertajam Federal Constituency) உள்ள ஒரு சிறு நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் சிம்பாங் அம்பாட், நாடு ...
சிம்பாங் அம்பாட் | |
---|---|
Simpang Ampat | |
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°16′59″N 100°28′59″E[1] | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | தென் செபராங் பிறை |
நாடாளுமன்றம் | பத்து காவான் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 14000, 14100, 14110, 14120, 14200[2] |
மலேசிய தொலைபேசி எண் | +6-04-50XXXX |
மலேசிய போக்குவரத்து பதிவெண் | P |
இணையதளம் | http://www.mpsp.gov.my |
மூடு
இந்த நகரத்தின் வடக்கில் புக்கிட் மெர்தாஜாம் நகரம்; கிழக்கில் சூன்சாங் நகரம்; தெற்கில் சுங்கை பாக்காப் நகரம்; மேற்கில் பத்து காவான் நகரம் ஆகிய நகரங்கள் உள்ளன. நான்கு நகரங்களுக்கு நடுவில் இந்த நகரம் அமைந்து இருப்பதால் இதற்கு சிம்பாங் அம்பாட் என பெயர் வைக்கப்பட்டது.
சிம்பாங் (Simpang) என்றால் மலாய் மொழியில் சந்திப்பு அல்லது சந்திக்கும் இடம்; அம்பாட் (Ampat) என்றால் எண்ணிக்கையில் நான்கு என்று பொருள்.