சிட்னி துறைமுகப் பாலம்
From Wikipedia, the free encyclopedia
சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும். இது தொடருந்து, தானுந்து, நடைபாதை மற்றும் ஈருருளி வழிகள் மூலம் சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் (CBD), வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. சிட்னி பாலமும் இதன் அருகே அமைந்திருக்கும் ஓப்பரா மாளிகையும் சிட்னிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும். இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால் இது "கோர்ட்டுக் கொழுவி" (Coathanger) என்று அழைக்கப்படுகின்றது.[1].
சிட்னி துறைமுகப் பாலம் Sydney Harbour Bridge | |
---|---|
வாகன வகை/வழிகள் | தொடருந்து, தானுந்து, பாதசாரிகள், ஈருருளிகள் |
கடப்பது | ஜாக்சன் துறைமுகம் |
இடம் | சிட்னி, ஆஸ்திரேலியா |
அதிகாரபூர்வ பெயர் | சிட்னி துறைமுகப் பாலம் |
Characteristics | |
வடிவமைப்பு | வளைவுப் பாலம் |
மொத்த நீளம் | 1149 மீ (3,770 அடி) |
அகலம் | 49 மீ (161 அடி) |
உயரம் | 139 மீ (456 அடி} |
அதிகூடிய தாவகலம் | 503 மீ (1,650 அடி) |
கீழ்மட்டம் | 49 மீட்டர்கள் (161 அடி) நடுப்பாகத்தில் |
History | |
திறக்கப்பட்ட நாள் | மார்ச் 19, 1932 |
1967 ஆம் ஆண்டு வரை இதுவே சிட்னியின் மிகப்பெரும் கட்டமைப்பாக இருந்தது. கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும். அத்துடன் உருக்கினாலான மிக உயரமான பாலமும் ஆகும். இதன் அதி உயர் புள்ளி பாலத்தில் இருந்து 134 மீட்டர்கள் (429.6 அடி) ஆகும்[1]. இது உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலமாகும்.