சாபி அப்டால்
மலேசிய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
டத்தோ ஸ்ரீ பாங்லிமா சாபி அப்டால் (ஆங்கிலம்; மலாய்: Mohd Shafie bin Apdal; சீனம்: 赛夫丁纳苏迪安; சாவி: محمد ساڤي بن أفضل; (பிறப்பு: 20 அக்டோபர் 1956) என்பவர் 2018 மே மாதம் முதல் 2020 செப்டம்பர் மாதம் வரை மலேசியா, சபா மாநிலத்தின் 15-ஆவது சபா முதலமைச்சர் பதவி வகித்தவர் ஆகும்.
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டத்தோ ஸ்ரீ பாங்லிமா சாபி அப்டால் Yang Berhormat YB Tuan Shafie Apdal | |
---|---|
15-ஆவது சபா முதலமைச்சர் | |
பதவியில் 12 மே 2018 – 29 செப்டம்பர் 2020 | |
மலேசிய தகவல் அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் | |
பதவியில் 1995–1999 | |
மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு துணை அமைச்சர் | |
பதவியில் 1999–1999 | |
மலேசிய தற்காப்பு துணை அமைச்சர் | |
பதவியில் 1999–2004 | |
மலேசிய உள்நாட்டு வணிகம் வாழ்க்கைச் செலவு அமைச்சர் | |
பதவியில் 2004–2008 | |
மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் | |
பதவியில் 2008–2009 | |
மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சர் | |
பதவியில் 2009–2015 | |
மக்களவை (மலேசியா) பாரிசான் நேசனல் வாரிசான் | |
பதவியில் 1995–2016 | |
சபா மாநில சட்டமன்றம் வாரிசான் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Mohd. Shafie bin Apdal 20 அக்டோபர் 1956 (1956-10-20) (அகவை 67) செம்பூர்ணா, பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (இப்போது சபா, மலேசியா) |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய சபா தேசிய அமைப்பு (USNO) (1983–1995) அம்னோ (UMNO) (1995–2016) வாரிசான் தலைவர் (2016 தொடக்கம்) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரிசான் நேசனல் (BN) (1983-2016) பாக்காத்தான் அரப்பான் (PH) (2016 தொடக்கம்) |
துணைவர் | சுரியானி சுவாய்ப் Shuryani Shuaib |
பிள்ளைகள் | 6 |
கல்வி | சபா கல்லூரி கோத்தா கினபாலு விக்டோரியா கல்விக்கழகம் |
முன்னாள் கல்லூரி | இசுடாபோர்ட்சயர் பல்கலைக்கழகம், லண்டன் (பொருளாதாரத்தில் இளங்கலை) |
வேலை | அரசியல்வாதி |
கையெழுத்து | |
சபா மாநிலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 2016 அக்டோபர் 17-ஆம் தேதி சபா பாரம்பரிய கட்சி (ஆங்கிலம்: Sabah Heritage Party மலாய்: Parti Warisan Sabah) எனும் கட்சியை சாபி அப்டால் உருவாக்கினார். அந்தக் கட்சியின் தலைவராக தலைமை தாங்கி வருகிறார்.
1995-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து சபா, செம்பூர்ணா மக்களவை தொகுதியின் (Semporna Federal Constituency) மலேசியநாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக (MP) பொறுப்பு வகிக்கும் இவர் மலேசிய அமைச்சரவையில் பல்வேறு அமைச்சுகளிலும் சாபி அப்டால் பணியாற்றியவர்.