சபா முதலமைச்சர்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
சபா மந்திரி பெசார் அல்லது சபா முதல்வர் (ஆங்கிலம்: Menteri Besar of Sabah அல்லது First Minister of Sabah; மலாய்: Menteri Besar Sabah; சீனம்: 沙巴首席部长) என்பவர் மலேசிய மாநிலமான சபா மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆவார். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைப்பது வழக்கம்.
விரைவான உண்மைகள் சபா மந்திரி பெசார் Menteri Besar of Sabah Menteri Besar Sabah, உறுப்பினர் ...
சபா மந்திரி பெசார் Menteri Besar of Sabah Menteri Besar Sabah | |
---|---|
![]() | |
தற்போது அஜி நூர் (Hajiji Noor) 29 செப்டம்பர் 2020 முதல் | |
![]() | |
உறுப்பினர் | சபா மாநில ஆட்சிக்குழு |
அறிக்கைகள் | சபா மாநில சட்டமன்றம் |
வாழுமிடம் | செரி காயா, கோத்தா கினபாலு, சபா |
அலுவலகம் | 32 - 33 மாடி, சபா மாநில நிர்வாக மையம், 88502 கோத்தா கினபாலு, சபா |
நியமிப்பவர் | ஜுகார் மகிருதீன் Juhar Mahiruddin சபா ஆளுநர் (Yang di-Pertua Negeri of Sabah) |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது |
முதலாவதாக பதவியேற்றவர் | புவாட் இசுடீபன்ஸ் (Fuad Stephens) |
உருவாக்கம் | 16 செப்டம்பர் 1963; 60 ஆண்டுகள் முன்னர் (1963-09-16) |
இணையதளம் | www |
மூடு
சபா மந்திரி பெசார், சபா மாநில சட்டமன்றத்தின் (Sabah State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.
தற்போது சபா மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் அஜி நூர் (Hajiji Noor). இவர் 29 செப்டம்பர் 2020 முதல் சபா மாநிலத்தின் மந்திரி பெசார் (முதல்வர்) பதவியை வகித்து வருகிறார்.