சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
இந்திய ஒன்றியப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதி (Jammu and Kashmir Union Territory) இந்திய நாடாளுமன்றம் 5 ஆகத்து 2019 அன்று இயற்றிய சம்மு காசுமீர் சீரமைப்புச் சட்டத்தின்படி, சம்மு காசுமீர் மாநிலத்தை சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு ஒன்றியப் பகுதிகளின் ஆட்சி முறை 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் கிரீசு சந்திர முர்மு பதவி ஏற்றது முதல் சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[11][12][13][14][15]
விரைவான உண்மைகள் சம்மு காசுமீர், நாடு ...
சம்மு காசுமீர் | |
---|---|
லித்தர் பள்ளத்தாக்கு, அக்னூர் கோட்டை | |
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியின் வரைபடம், ஜம்மு மற்றும் காஷ்மீரின் இந்திய நிர்வாகத்தின் யூனியன் பிரதேசத்தைக் காட்டுகிறது | |
நாடு | இந்தியா |
மாநிலம் | 31 அக்டோபர் 2019 |
தலைநகரம் | சிரீநகர் (மே–அக்டோபர்) சம்மு (நவம்பர்-ஏப்ரல்)[1] |
மாவட்டங்கள் | 20 |
அரசு | |
• நிர்வாகம் | சம்மு காசுமீர் அரசு |
• துணைநிலை ஆளுநர் | மனோச்சு சின்கா (7 ஆகத்து 2020 - ) |
• முதலமைச்சர் | பதவியிடம் காலி |
• சம்மு காசுமீர் சட்டமன்றம் | ஓரவை முறைமை (114 உறுப்பினர்கள்)[2] |
• நாடாளுமன்றத் தொகுதிகள் | மாநிலங்களவை (4) மக்களவை (5) |
• உயர் நீதிமன்றம் | சம்மு காசுமீர் உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 42,241 km2 (16,309 sq mi) |
உயர் புள்ளி | 7,135 m (23,409 ft) |
தாழ் புள்ளி | 247 m (810 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,22,67,013[4] |
மொழிகள் | |
• அலுவல் | காசுமீரி, உருது, இந்தி, தோக்கிரி மற்றும் ஆங்கிலம்[5][6][7] |
• உள்ளூர் மொழிகள் | காசுமீரி, தோக்கிரி, பஞ்சாபி, பகாரி மொழி, குருசாரி மொழி, தாத்திரி மொழி[8][9][10] மற்றும் இந்தி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-JK |
வாகனப் பதிவு | JK |
இணையதளம் | https://www.jk.gov.in |
மூடு
சம்மு காசுமீர் அரசின் அலுவல் மொழிகளாக காசுமீரி, உருது, இந்தி, தோக்கிரி மற்றும் ஆங்கிலம் ஆகியவைகள் இருக்கும் என 1 செப்டம்பர் 2020 அன்று இந்திய அரசு அறிவித்துள்ளது.[16][17]