சபா முற்போக்கு கட்சி
From Wikipedia, the free encyclopedia
சபா முற்போக்கு கட்சி (Sabah Progressive Party, மலாய்: Parti Maju Sabah, சீனம்: 沙巴进步党) என்பது கிழக்கு மலேசியா, சபாமாநிலத்தைத் தளமாகக் கொண்டுள்ள ஒரு பல்லின அரசியல் கட்சியாகும். பி.பி.எஸ் என்று அழைக்கப்படும் ஐக்கிய சபா கட்சியில் இருந்து வெளியேறிய டத்தோ யோங் தெக் லீ என்பவரால், 1994 ஜனவரி 21இல் தோற்றுவிக்கப்பட்ட கட்சி. யோங் தெக் லீ சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகப் பதவி வகித்தவர்.
சபா முற்போக்கு கட்சி Sabah Progressive Party 沙巴进步党 | |
---|---|
தலைவர் | டத்தோ யோங் தெக் லீ Datuk Yong Teck Lee |
செயலாளர் நாயகம் | ரிச்சர்ட் யோங் வீ கோங் Richard Yong We Kong |
தொடக்கம் | ![]() |
தலைமையகம் | ![]() |
இளைஞர் அமைப்பு | 'சாப்' இளைஞர் அணி SAPP Youth |
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் | 2 / 222 |
மாநில சட்டசபைத் தொகுதிகள் | 2 / 576 |
இணையதளம் | |
http://www.sapp.org.my/ |
சாப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் சபா முற்போக்கு கட்சி, முன்பு பாரிசான் நேசனல் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்தது. 2008 செம்படம்பர் மாதம் பாரிசான் நேசனல் கூட்டணியில் இருந்து விலகி ஒரு சுயேட்சை கட்சியானது.[1]
இந்தக் கட்சிக்கு மலேசிய நாடாளுமன்றத்தில் இரண்டு இடங்களும், சபா மாநிலச் சட்டசபையில் இரண்டு இடங்களும் உள்ளன. ஒரு நாடு இரு முறைமைகள் எனும் கொள்கையில் பிடிவாதமாக இருக்கும் இந்தக் கட்சி, கீழ்க்காணும் திட்டங்களை அமல்படுத்த, நடுவண் அரசை நெருக்கி வருகிறது.
- போர்னியோவை போர்னியோ மயமாக்குவது
- மாநில-நடுவண் அரசு உறவுகளையும் சட்டத்திட்டங்களையும் மறுபரிசீலனை செய்வது
- சபா பூர்வீக விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது
- தன்னாட்சி கொண்ட சபா மாநில அரசைத் தோற்றுவிப்பது[2]