![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f4/Chandrayaan-2_lander_and_orbiter_integrated_module.jpg/640px-Chandrayaan-2_lander_and_orbiter_integrated_module.jpg&w=640&q=50)
சந்திரயான்-2
நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் / From Wikipedia, the free encyclopedia
சந்திரயான்-2 (Chandrayaan-2)[13][14] என்பது சந்திரயான்-1 இற்குப் பின்னர் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் ஆகும்.[15] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம்,[16][17] ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019, சூலை 22 அன்று நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.[8][9][18] இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையூர்தி(நடமாடும் ஆய்வகம்) ஆகியன உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டமைக்கப்பட்டன.[19] இதன் முதன்மையான அறிவியல் குறிக்கோள் நிலா மேற்பரப்பு உட்கூற்று வேறுபாடுகளை ஆய்வு செய்து படம் வரைதலும் நிலாத் தண்ணீர் செறிவாக அமையும் இடங்களைக் கண்டறிதலும் ஆகும்.
![]() Chandrayaan-2 composite | |||||
திட்ட வகை |
| ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் | ||||
காஸ்பார் குறியீடு | 2019-042A | ||||
சாட்காட் இல. | 44441 | ||||
இணையதளம் | Chandrayaan2 | ||||
திட்டக் காலம் | |||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
தயாரிப்பு | இசுரோ | ||||
ஏவல் திணிவு | இணைந்த தொகுதி (ஈரம்): 3,850 கிகி [2][3] இணைந்த தொகுதி (உலர்): 1,308 கிகி [4] சுற்றுக்கலம் (ஈரம்): 2,379 கிகி [2][3] சுற்றுக்கலம் (உலர்): 682 கிகி [4] விக்ரம் தரையிறங்கி (ஈரம்): 1,471 கிகி [2][3] விக்ரம் தரையிறங்கி (உலர்): 626 கிகி[4] பிரகியான் தரையூர்தி: 27 கிகி [2][3] | ||||
திறன் | சுற்றுக்கலம்: 1000 வாட்டு [5] விக்ரம் தரையிறங்கி: 650 வாட் [6] பிரகியான் தரையூர்தி: 50 வாட் | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | 22 சூலை 2019, 09:13:12 ஒசநே[7] | ||||
ஏவுகலன் | ஜி. எஸ். எல். வி மார்க் III M1 [8][9] | ||||
ஏவலிடம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் | ||||
ஒப்பந்தக்காரர் | இசுரோ | ||||
நிலா சுற்றுக்கலன் | |||||
சுற்றுப்பாதையில் இணைதல் | 20 ஆகத்து 2019, 03:32 ஒசநே[10][11] | ||||
நிலா தரையிறங்கி | |||||
விண்கலப் பகுதி | தரையூர்தி | ||||
தரையிறங்கிய நாள் | 6 செப்டம்பர் 2019, 20:23 ஒசநே [11][12] | ||||
தரையிறங்கிய பகுதி | நிலாவின் தென்முனை (திட்டம்) | ||||
----
|
தரையூர்தி நிலாவின் மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளவும், தான் திரட்டிய தரவுகளைச் சுற்றுக்கலன், தரையிறங்கியூடாக புவிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது. சுற்றுக்கலன் ஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.[6][20][21] 2019 செப்டம்பர் 7 இல் நிலாவில் நிலநேர்க்கோட்டின் கிட்டத்தட்ட 70° தெற்கே மன்சீனசு சி, சிம்பேலியசு என் ஆகிய இரு குழிகளிடையேயுள்ள மேட்டுச்சமவெளியில் சந்திரயான்-2 இன் தரையிறங்கியும், உலாவியும் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
என்றாலும், 2019, செப்டம்பர் 6 இல் தரையிறங்க முயலும்போது, தன் திட்டமிட்ட தடவழியில் இருந்து விலகியதால் அது நிலாத்தரையில் மொத்தியநிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே, தரையிறங்கியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கம் செய்ய இயலவில்லை.இசுரோ பெற்ற பழுது பகுப்பாய்வு அறிக்கையின்படி, மொத்தல் சிறு மென்பொருள் வழுவியதால் நேர்ந்ததாகக் கூறப்பட்டது. இதனால், இசுரோ 2023 இல் சந்திரயான்-3 வழியாக நிலாத்தரையில் மென்மையான தரையிறக்கத்துக்கு மறுமுயர்சி செய்ய முடிவெடுத்தது.