From Wikipedia, the free encyclopedia
சக்தி ( Shakti ) என்பது, திறன், வலிமை, முயற்சி, ஆற்றல், எனப் பொருள்படும்.[1] இந்து சமயத்தில் சக்தி [2] முழு பிரபஞ்சத்தின் வழியாக பெறப்படுகிறது என்று கருதப்படுகிறது. குறிப்பாக இந்து மதத்தில், முக்கிய பாரம்பரியமான சக்தி என்பது உயிருள்ள அனைத்திலும் செயல்படும் ஆற்றலைக் குறிக்கிறது.
இந்து சமயத்தில், சக்தி என்பது தெய்வீக பெண்பால் படைப்பு அல்லது உருவகமாகும். இது சில சமயங்களில் இந்து மதத்தில் "தெய்வீக தாய்" என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு தாயாக, அவர் " ஆதி சக்தி " அல்லது " ஆதி பராசக்தி " என்று அழைக்கப்படுகிறார். பூமியில், சக்தி என்பது, பெண் உருவகம் மற்றும் படைப்பாற்றல் / கருவுறுதல் ஆகியவற்றின் மூலம் மிகவும் தீவிரமாக வெளிப்படுத்தப்படுகிறது. இருப்பினும் இது ஆண்களிலும் அதன் ஆற்றல்மிக்க, வெளிப்படையான வடிவத்தில் உள்ளது.[3] படைப்பு மற்றும் அனைத்து மாற்றங்களுக்கும் முகவர் சக்தி தான் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். சக்தி என்பது அண்ட இருப்பு மற்றும் விடுதலை ஆகிய கோணங்களில் மக்களால் காணப்படுகிறது. இதன் மிக முக்கியமான வடிவம் குண்டலினி சக்தி எனப்படும் ஒரு மர்மமான மனோதத்துவ சக்தியாகும். இதைத் தவம் மற்றும் யோகப் பயிற்சி செய்பவர்கள் உணருவதாகக் கருதப்படுகிறது.[4][5]
சக்தி சாக்தம் மதத்தில், மிகவும் உயர்ந்த கடவுளாக வணங்கப்படுகிறது. சக்தி சிவனின் செயலில் உள்ள பெண் ஆற்றலைக் குறிக்கிறது. மேலும், இது திரிபுர சுந்தரி அல்லது பார்வதியுடன் ஒத்ததாக அடையாளம் காணப்படுகிறது.
டேவிட் கின்ஸ்லி இறைவன் இந்திரனின் "சக்தியை" சசி (இந்திராணி) என்று குறிப்பிடுகிறார், அதாவது, இந்திராணி என்பதற்கு சக்தி எனப் பொருள் விளங்குகிறது.[6] இவர், ஏழு அல்லது எட்டு தேவதைகள் கொண்ட குழுவில் ஒருவராக உள்ளார். இவர்கள் அனைவரும் சேர்ந்து சப்தகன்னியர் என அழைக்கப்படுகின்றனர். ( பிராம்மி, வைஷ்ணவி, மகேஸ்வரி, இந்திராணி, கௌமாரி, வராகி மற்றும் சாமுண்டி அல்லது நரசிம்மி ) இவர்கள் அனைவரும் இந்து மத முக்கிய கடவுளர்களின் சக்திகளாக ( பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், ஸ்கந்தா, வராஹா / யமா மற்றும் நரசிம்ம ) கருதப்படுகின்றனர்.
சக்தி தெய்வம் தென்னிந்தியாவில் 'அம்மா' அதாவது 'தாய்' என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் சக்தி தெய்வத்தின் பல்வேறு அவதாரங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் இருக்கும் சக்தி, கிராமத்தை பாதுகாப்பவர், தீயவர்களைத் தண்டிப்பவர், நோய்களைக் குணப்படுத்துபவர், கிராமத்திற்கு நன்மைகள் வழங்குபவர் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சக்திக்கு விழா எடுத்து மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகிறார்கள். சக்தி அவதாரங்களில் சில உதாரணங்கள் மகாலட்சுமி, காமாட்சி, பார்வதி, லலிதா, புவனேஸ்வரி, துர்கா, மீனாட்சி, மாரியம்மன், ரேணுகா, பொலேரம்மா, மற்றும் பேரந்தாலம்மா ஆகியோர் ஆவர்.
இந்தியாவில் தெய்வத்தின் பழமையான பிரதிநிதித்துவங்களில் ஒன்று முக்கோண வடிவத்தில் உள்ளது. இதை சக்தியின் அம்சமாகக் கருதி மக்கள் வழிபடுகின்றனர். சோன் நதி பள்ளத்தாக்கில் ஒரு பாலியோலிதிக் சூழலில் காணப்பட்ட பாகூர் கல் மற்றும் கிமு 9,000-8,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.[7] இது, ஒரு யந்திரத்தின் ஆரம்ப எடுத்துக்காட்டு என்று கருதப்படுகிறது.[8] இந்தக் கல்லை அகழ்வாராய்ச்சி செய்த குழுவின் ஒரு உறுப்பினரான கெனோயர், இந்த கல் சக்தியுடன் தொடர்புடையது என்பது மிகவும் சாத்தியமானதாக இருப்பதாக கருதினார்.[9]
சில மடாலயங்களின் கூற்றுப்படி, தெற்காசியாவில் நான்கு ஆதி சக்தி பீடங்கள் மற்றும் 51 சக்தி வழிபாட்டு மையங்கள் உள்ளன. (நான்கு ஆதி சக்தி பீடங்களும் 51 சக்தி பீடங்களின் ஒரு பகுதியாகும், ஆனால் அவை தேவி சக்தியின் உடலின் நான்கு முக்கிய பாகங்கள். எனவே, அவை ஆதி சக்தி பீடங்கள் எனப்படுகிறது). இந்தியா, இலங்கை, நேபாளம், வங்காள தேசம், திபெத் மற்றும் பாகிஸ்தானில் இவற்றைக் காணலாம். இவை சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் இருப்பிடங்களின் பட்டியல் மாறுபடும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சக்தி பீடங்கள் மற்றும் அவற்றின் கோயில் வளாகங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பிற சக்தி பீடங்கள் :
Seamless Wikipedia browsing. On steroids.