From Wikipedia, the free encyclopedia
சாமுண்டி (சமசுகிருதம்: चामुणडी, Cāmuṇḍī ), சப்த கன்னியர்களில் ஒரு தெய்வமாகும். இவரை சாமுண்டீஸ்வரி என்றும் அழைக்கின்றனர். இவர் பார்வதி துர்க்கை என்ற உருவத்தில் போரில் ஈடுபடும் போது அவருடைய படையில் ஒருவராக இருந்தார் மற்றும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து அனைத்து அரக்கர்களையும் கொன்று அழித்தனர்.
சாமுண்டி | |
---|---|
போசாளப் பேரரசின் சாமுண்டி சிற்பம், ஹளபீடு | |
அதிபதி | போர் |
தேவநாகரி | चामुणडी |
சமசுகிருதம் | Cāmuṇḍī |
தமிழ் எழுத்து முறை | சாமுண்டி |
பாளி IAST | Cāmuṇḍī |
எழுத்து முறை | चामुंडी |
வகை | தேவி, சப்தகன்னியர் |
இடம் | கைலாயம் |
கிரகம் | கேது |
மந்திரம் | ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே |
ஆயுதம் | திரிசூலம், வாள் |
துணை | பீட்சன பைரவர் |
இவர் பார்வதியின் அம்சமாவார். நான்கு கரங்களும், மூன்று நேத்திரங்களும், கோரைப்பற்களும், கரு மேனியும் உடையவர். இவர் புலித்தோல் உடுத்தி கபால மாலையை அணிந்திருக்கிறார். முத்தலைச் சூலம், முண்டம், கத்தி, கபாலம் ஆகிய ஆயுதங்களை தரித்தும், ஒரு பிணத்தின் மீது அமர்ந்தும் காட்சியளிக்கிறார். இவர் சண்டர் முண்டர் என்ற இரண்டு அரக்கர்களை கொள்வதற்காக அவதாரம் எடுத்தார் மற்றும் அவர் இருவரையும் கொன்றார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.