Remove ads
From Wikipedia, the free encyclopedia
பழையகற்காலம் என்பது, மனித தொழில்நுட்ப வளர்ச்சிக் கால கட்டமான கற்காலத்தின் முதல் பகுதியாகும். இது சுமார் 2,000,000 ஆண்டுகளுக்குமுன், மனித மூதாதையர்களான ஹோமோ ஹெபிலிஸ் (Homo habilis) போன்ற ஹொமினிட்டுகள் (hominids) கற்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதுடன் ஆரம்பமானது. இது, இடைக்கற்காலத்துடன் அல்லது முன்னதாகவே புதியகற்கால வளர்ச்சி இடம்பெற்ற சில பகுதிகளில், எபிபலியோலிதிக் முடிவுற்றது.
பொதுவாகப் பழையகற்காலத் தொடக்கத்தில் மக்கள், வேட்டையாடுபவர்களாகவும், உணவு சேகரிப்பவர்களாகவும் இருந்தனர். விடயங்களை விளக்குவதற்கு, முறைசாராத பழங்கதைகளைப் பயன்படுத்தியது, இக்காலத்தில் குறிப்பிடத் தகுந்த சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். இயல்பான தலைவர்களின் கீழ், தற்காலிகமாக ஒழுங்கமைப்பை உருவாக்குவதேயன்றி நிரந்தரமான தலைமையோ, ஆட்சியோ இருக்கவில்லை.
ஆண், பெண்களுக்கு இடையே ஏறத்தாழ சமநிலை நிலவியது. ஆண் வேட்டையில் ஈடுபடப் பெண் உணவு சேகரிப்பதிலும், குழந்தைகளைக் கவனிப்பதிலும் ஈடுபட்டாள். இதற்கு மேலுள்ள வேலைகளை இரு பகுதியினரும் பகிர்ந்து செய்ததாகவே தெரிகிறது. அவர்கள் தாவரங்கள், மூலிகைகள் என்பன பற்றிக் குறிப்பிடத்தக்க அறிவைப் பெற்றிருந்தனர். இதனால் அவர்களுடைய உணவு சுகாதாரமானதாக இருக்க முடிந்தது.
அவர்களுடைய தொழில்னநுட்பத் திறனை, அவர்கள் உருவாக்கிய, உடைக்கப்பட்ட கற்களினாலும், தீக்கல்லினாலும் ஆன பயன்பாட்டுப் பொருட்கள் (artifacts), மரம், களிமண், விலங்குப் பகுதிகளின் பயன்பாடு, ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. அவர்களுடைய கருவிகள் பல்வேறுபட்டவை. கத்திகள், கோடரிகள், சுரண்டிகள், சுத்தியல்கள், ஊசிகள், ஈட்டிகள், தூண்டில்கள், கேடயங்கள், கவசங்கள்,அம்பு வில்|அம்பு விற்கள் ஆகியவை இவற்றுள் அடங்கும்.
இக் காலத்தில் பல்வேறு இடங்களில், பனிக்கட்டி வீடுகள், சிறிய மிதவைகள் போன்றவை பற்றி அறிந்திருந்ததுடன், பாம்புகளின் நஞ்சு, ஐதரோசயனிக் அமிலம் (hydrocyanic acid), அல்கலோயிட்டுகள் போன்ற நச்சுப் பொருட்கள் பற்றியும் அறிந்திருந்ததாகத் தெரியவருகிறது. குளிரில் உறையவைத்தல், காயவைத்தல், மெழுகு, களிமண் ஆகியவற்றைப் பயன்படுத்திக் காற்றுப்புகாது அடைத்தல், போன்ற உணவுகள் கெட்டுப்போகாது காக்கும் முறைகள் பற்றிய அறிவும் அவர்களுக்கு இருந்தது. இவர்கள் விவசாயம்,விவசாயம்,தீ,மட்பாண்டம் மற்றும் உலோகங்களைப் பற்றி அறியவில்லை.
அக்காலத்துச் சமயம் சிறப்பாக, மனிதர்களைத் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் செயற்பாடுகளைக் கொண்டது. இவற்றுக்காகத் தாயத்துக்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டதுடன், மந்திர, மாயங்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன. ஐரோப்பாவில், ஓவியங்கள் பழையகற்காலத்தின் முடிவை அண்டியே (கி.மு 35,000) தோற்றம் பெற்றதாகத் தெரிகிறது. பழையகற்கால மனிதர், ஓவியம் வரைதலிலும், செதுக்குவதிலும் ஈடுபட்டிருந்தனர். விலங்குகளை வரைவதிலும், செதுக்குவதிலும் அவர்களுக்கு இருந்த திறன் குறிப்பிடத்தக்க அளவு உயர்வானதாக இருந்தது. அக்காலச் சமூகத்தில், இக் கலைகள், வேட்டையில் வெற்றியையும், பயிர்கள், பெண்கள் தொடர்பில் வளத்தையும் நோக்கியே பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பழையகற்காலம் பொதுவாக மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.