![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/A_Coolie_Chieftain.jpg/640px-A_Coolie_Chieftain.jpg&w=640&q=50)
கோலி மக்கள்
இந்தியாவின் பழங்குடியின மக்கள் / From Wikipedia, the free encyclopedia
கோலி ( Koli ) என்பது இந்தியாவில் உள்ள ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், குசராத்து, மகாராட்டிரம், உத்தரப் பிரதேசம், அரியானா, கருநாடகம்,[1] ஒடிசா [2] , ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் காணப்படும் ஒரு இந்தியச் சாதியாகும் . [3] கோலி குசராத்தைச் சேர்ந்த ஒரு விவசாய சாதி, ஆனால் கடலோரப் பகுதிகளில் இவர்கள் விவசாயத்துடன் மீனவர்களாகவும் வேலை செய்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதலாம் உலகப் போரின் போது கோலி சாதியினரின் கொள்ளை, கொலை, கப்பம் மற்றும் பயிர் மற்றும் விலங்கு திருட்டு போன்ற சமூக விரோத செயல்களால் பிரித்தானிய இந்திய அரசாங்கத்தால் குற்றப் பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டனர். குசராத்து மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் கோலி சாதியினர், அந்த மாநிலங்களில் உள்ள மொத்த மக்கள் தொகையில் முறையே 24% மற்றும் 30% வீதத்தைக் கொண்ட மிகப் பெரிய சாதிக் கூட்டமாக உள்ளனர். [4] [5]
कोली, કોલી, कोळी | |
---|---|
![]() ஓவியக் கலைஞர் யேம்சு போர்ப்சு, 1813-ல் வரைந்த ஒரு கோலி தலைவரின் உருவப்படம் | |
மொழி(கள்) | |
இந்தி, குஜராத்தி, மராத்தி, கோலி, கொங்கணி, கன்னடம் | |
சமயங்கள் | |
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கோரி, கோல்கி, கோலி கிறித்துவர் |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/24/A_Koli_boy_in_the_traditional_attire.jpg/640px-A_Koli_boy_in_the_traditional_attire.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4e/A_koli_girl_anchoring_in_the_traditional_attire_%27Kashta%27.jpg/320px-A_koli_girl_anchoring_in_the_traditional_attire_%27Kashta%27.jpg)