கொடைக்கானல்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலம் மற்றும் நகராட்சி. From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலம் மற்றும் நகராட்சி. From Wikipedia, the free encyclopedia
கொடைக்கானல் (ஆங்கில மொழி: Kodaikanal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டம் மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.
கொடைக்கானல் | |||||||
— சிறப்பு நிலை நகராட்சி — | |||||||
ஆள்கூறு | 10°14′06″N 77°29′10″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திண்டுக்கல் | ||||||
வட்டம் | கொடைக்கானல் வட்டம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
நகராட்சித் தலைவர் | |||||||
ஆணையர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
36,501 (2011[update]) • 1,702/km2 (4,408/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
21.45 சதுர கிலோமீட்டர்கள் (8.28 sq mi) • 2,133 மீட்டர்கள் (6,998 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.municipality.tn.gov.in/Kodaikanal |
இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.
22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998 அடி) உயரத்தில் உள்ளது.
கோடை காலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 19.8 டிகிரி சென்டிகிரேடும், குறைந்த பட்ச வெப்ப நிலை 6 டிகிரி சென்டிகிரேடும் இருக்கும்.
1821இல் லெப்டினன்ட் பி. ச. வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்தார். இந்தியாவில் அரசுப் பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதினார். 1845இல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்துவந்த கோடை வாசத்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது. கொடைக்காணல் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. கொங்கு மண்டலத்தில் தெற்குக் பகுதியாக இருக்கிறது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,442 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 36,501 ஆகும். அதில் 18,216 ஆண்களும், 18,285 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,004பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3893 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,002 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,250 மற்றும் 102 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 48.84%, இசுலாமியர்கள் 12%, கிறித்தவர்கள் 38.69% மற்றும் பிறர் 0.43% ஆகவுள்ளனர்.[5]
சென்னை-திருச்சிராப்பள்ளி-மதுரை-திருநெல்வேலி-கன்னியாகுமரி தொடருந்துப் பாதையில், திண்டுக்கல் மற்றும் மதுரைக்கு இடையில் அமைந்துள்ள கொடை ரோடு என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொடைக்கானலுக்கு மகிழுந்து அல்லது பேருந்து மூலம் செல்ல வேண்டும். திண்டுக்கல், மதுரை, கோவை, பழனி, வத்தலக்குண்டு, திருச்சி, சென்னை, பெங்களூர், நாகர்கோவில், ராமேஸ்வரம், காரைக்குடி, போடி, குமுளி, வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மகிழுந்தில் செல்வோர் கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும், பழனி மலை வழியாகவும், பாச்சலூர், தாண்டிக்குடி வழியாகவும் மலைப்பாதைகள் வழியாக செல்லலாம். இவற்றுள் வத்தலக்குண்டு வழியே செல்லும் பாதையே சிறந்ததாக உள்ளது. தேனியிலிருந்து மகிழுந்தில் கொடைக்கானல் செல்பவர்கள் பெரியகுளம், தேவதானப்பட்டி தாண்டியவுடன் காட்ரோடு என்ற இடத்தில் கொடைக்கானல் செல்லும் சாலை பிரிவதால் அங்கிருந்தே செல்லலாம்.
அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.