![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/Jalan_Kepong_2.jpg/640px-Jalan_Kepong_2.jpg&w=640&q=50)
கெப்போங்
கோலாலம்பூர் கூட்டரசு மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
கெப்போங், (மலாய்: Kepong; ஆங்கிலம்: Kepong; சீனம்: 甲洞); என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சி நிலப்பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரம். ’கெப்போங்’ என்பது ஒரு மலாய்ச் சொல். "சூழ்" அல்லது "சுற்று" என்று பொருள். இந்த நகரம் ஒரு மலைத்தொடரால் சூழப்பட்டு உள்ளது. அதனால் அந்தப் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம்.
விரைவான உண்மைகள் கெப்போங்Kepong, நாடு ...
கெப்போங் Kepong | |
---|---|
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°12′51.2″N 101°38′20.1″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
கூட்டரசு நிலப்பகுதி | கோலாலம்பூர் கூட்டரசு மாநிலம் |
அரசு | |
• உள்ளூராட்சி | கோலாலம்பூர் மாநகர் கழகம் |
• மேயர் | முகமட் அமின் நோர்டின் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 52xxx, 51xxx |
தொலைபேசி எண் | +603-62 |
போக்குவரத்துப் பதிவெண் | B |
மூடு
கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 12 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது. அருகாமையில் உள்ள நகரங்கள் டாமன்சாரா (சிலாங்கூர்), கெப்போங், குவாங் மற்றும் கோலா சிலாங்கூர்.