![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/6/69/Keadilan_Malaysia.png/640px-Keadilan_Malaysia.png&w=640&q=50)
கெஅடிலான்
From Wikipedia, the free encyclopedia
கெஅடிலான் (keADILan) என்பது மலேசியாவில் இயங்கிய ஓர் அரசியல் கட்சி ஆகும். தற்போது இந்தக் கட்சி மக்கள் நீதிக் கட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. 10 டிசம்பர் 1998-இல் உருவாக்கப்பட்ட கெஅடிலான் கட்சி மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கட்சி என அறியப்படுகிறது.
மக்கள் நீதிக் கட்சி KEADILAN | |
---|---|
![]() | |
ஆலோசகர் | டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் |
தலைவர் | டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் |
துணை தலைவர் உதவித் தலைவர்(கள்) | அஸ்மீன் அலி சிவராசா ராசையா சுரேந்திரன் நாகராஜன் நூருள் இசா அன்வார் சுவா தியான் சாங் பாவ்சியா சாலே |
பொது செயலாளர் | சைபுதின் நாசுதியோன் |
தொடக்கம் | ஏப்ரல் 1, 2008 |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
செய்தி ஏடு | நீதி குரல் |
இளைஞர் அமைப்பு | பிகேஆர் இளைஞர் பிரிவு |
கொள்கை | சமூக தாராளவாதம் |
தேசியக் கூட்டணி | மாற்று பாரிசான் (1999–2004) பாக்காத்தான் ராக்யாட் (2008–தற்போது) |
நிறங்கள் | வெள்ளை, சிவப்பு, நீலம் |
மலேசிய மக்களவை | 31 / 222 |
சட்டமன்றங்கள்: | 38 / 611 |
இணையதளம் | |
www.keadilanrakyat.org www.keadilandaily.com |
தற்போதைய பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் முன்னோடி முதன்மைக் கட்சியாக விளங்கிய கெஅடிலான் கட்சி 3 ஆகஸ்டு 2003-இல் மக்கள் நீதிக் கட்சி என பெயர் மாற்றம் கண்டது. இந்தக் கட்சியை கெடிலான் என்றும் கெஅடிலான் என்றும் அழைப்பது வழக்கம்.
மலேசிய நீதிக் கட்சி அல்லது மக்கள் நீதிக் கட்சி (மலாய்: Parti Keadilan Rakyat, ஆங்கில மொழி: People's Justice Party,) எனும் மலாய் மொழிச் சொல்தொடரின் உருவாக்கமே கெடிலான் என்பதாகும். கெடிலான் எனும் சொல்லின் மற்றோர் அழைப்புச் சுருக்கம் பி.கே.ஆர். பி என்றால் (Parti தமிழ் : கட்சி); கே என்றால் (Keadilan தமிழ் : நீதி); ஆர் என்றால் (Rakyat தமிழ் : மக்கள்).