![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/Great_Mosque_in_Gulbarga_Fort..jpg/640px-Great_Mosque_in_Gulbarga_Fort..jpg&w=640&q=50)
குல்பர்கா
From Wikipedia, the free encyclopedia
குல்பர்கா அல்லது கலபுரகி (ஆங்கிலம்: Gulbarga, Kalaburagi கன்னடம்: ಗುಲಬರ್ಗಾ, ಕಲಬುರಗಿ, தமிழ்: கொள்ளிப்பாக்கை ) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். கடந்த ஆண்டு கருநாடக அரசாங்கம் குல்பர்கா நகரத்தின் பெயரை அதன் கன்னட வடிவமான கலபுரகி என மாற்றம் செய்தது[1]. கன்னட மொழியில் கலபுரகி என்றால் தமிழில் கல்பரப்பி என , அதாவது கற்களை பரப்பியது போல காணப்படும் ஒரு நகரம் என பொருள்படும்.
விரைவான உண்மைகள்
குல்பர்கா ಗುಲ್ಬರ್ಗ | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 17°20′00″N 76°50′00″E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | கருநாடகம் | ||||||
பிரிவு | குல்பர்கா கோட்டம் | ||||||
மாவட்டம் | குல்பர்கா மாவட்டம் | ||||||
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் | ||||||
முதலமைச்சர் | கே. சித்தராமையா | ||||||
நகராட்சி ஆணையர் | |||||||
மக்களவைத் தொகுதி | குல்பர்கா | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 454 மீட்டர்கள் (1,490 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு
இது குல்பர்கா மாவட்டம் மற்றும் குல்பர்கா கோட்டத்தின் தலைநகருமாகும். இந்த நகரம் முன்னதாக நிசாமின் ஐதராபாத் இராச்சியத்தின் அங்கமாக இருந்தது. ஐதராபாத்திலிருந்து 200 கிமீ தொலைவிலும் மாநிலத் தலைநகர் பெங்களூருவிலிருந்து வடக்கே 623 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.