![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9f/Tasik_Biru_Kundang_3.jpg/640px-Tasik_Biru_Kundang_3.jpg&w=640&q=50)
குண்டாங்
From Wikipedia, the free encyclopedia
குண்டாங் அல்லது பெங்காலான் குண்டாங், (மலாய்: Pengkalan Kundang; ஆங்கிலம்: Kundang; சீனம்: 昆当); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், கோம்பாக் மாவட்டத்தில் (Gombak District); செலாயாங் நகராட்சியில் (Majlis Perbandaran Selayang) உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ. மேற்கே உள்ளது.[1]
குண்டாங் Kundang | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: 3°17′0″N 101°31′0″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கோம்பாக் மாவட்டம் |
நிர்வாக மையம் | செலாயாங் |
அமைவு | 1910 |
அரசு | |
• நகராட்சி | செலாயாங் நகராட்சி (Selayang Municipal Council) |
நேர வலயம் | மலேசிய நேரம் |
அஞ்சல் குறியீடு | 48050 |
தொலைபேசி எண்கள் | +60-360 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | mps |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/94/Bouea_macrop_Fr_080109-3217_tdp.jpg/640px-Bouea_macrop_Fr_080109-3217_tdp.jpg)
முன்பு காலத்தில் குண்டாங் ஒரு வேளாண் கிராமமாக இருந்தது. ஆனால் இப்போது, அதன் சொந்த நெடுஞ்சாலையான
கோலாலம்பூர்-கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை (Kuala Lumpur–Kuala Selangor Expressway) (LATAR) எனும் விரைவுச்சாலையைப் பெற்று சிலாங்கூர் மாநிலத்தின் நவீன கிராமங்களில் ஒன்றாக விளங்குகிறது.
பண்டார் தாசேக் புத்திரி (Bandar Tasik Puteri), பெக்கான் குண்டாங் (Pekan Kundang), ரவாங் ஆகியவை அருகிலுள்ள நகரங்கள் ஆகும்.[2]
இந்தக் கிராமப்புற நகரம், சீனா கௌசோ (Gaozhou) நகரில் இருந்து குடியேறியவர்களின் ஈயச் சுரங்கக் குடியேற்றமாகும். ஈயச் சுரங்கத் தொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டதும், கிராம மக்கள் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டனர்.