![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bc/KKH.png/640px-KKH.png&w=640&q=50)
காரகோரம் நெடுஞ்சாலை
From Wikipedia, the free encyclopedia
காரகோரம் நெடுஞ்சாலை (Karakoram Highway (உருது: شاہراہ قراقرم; துவக்கத்தில் இதனை KKH என்றும், பின்னர N-35 அல்லது தேசிய நெடுஞ்சாலை 35 என்றும் சீன-பாகிஸ்தான் நட்புறவு நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்பட்டது). பட்டுப் பாதையில் அமைந்த காரகோரம் நெடுஞ்சாலை 1,300 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இது பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் ஹசன் அப்தால் எனுமிடத்திலிருந்து துவங்கி, லாகூர், இராவல்பிண்டி, இஸ்லாமாபாத் வழியாக கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெசாவர் நகரத்தின் வழியாக, காஷ்மீரத்தின் வடக்கில் உள்ள ஜில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியிலிருந்து, சீனாவின் தூரமேற்கில் உள்ள சிஞ்சியாங் மாநிலத்தின் கஷ்கர் நகரத்தை இணைக்கிறது.
வார்ப்புரு:Infobox road/shieldmain/பாகிஸ்தான் வார்ப்புரு:Infobox road/name/பாகிஸ்தான் | |
---|---|
காரகோரம் நெடுஞ்சாலை | |
![]() | |
வழித்தட தகவல்கள் | |
ஆசிய நெடுஞ்சாலை 1 & ஆசிய நெடுஞ்சாலை 4 இன் பகுதி | |
பராமரிப்பு பாகிஸ்தான் தேசிய நெடுஞ்சாலை நிறுவனம் மற்றும் சீனாவின் சிஞ்சியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் போக்குவரத்து துறை | |
நீளம்: | 1,300 km (810 mi) பாகிஸ்தான்: 887 km (551 mi) சீனா: 413 km (257 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1966 – present |
வரலாறு: | 1979-இல் முடிவுற்றது. பொதுப் போக்குவரத்திற்கு 1986 முதல் திறக்கப்பட்டது. |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | ![]() ![]() ![]() ![]() |
![]() ![]() | |
தெற்கு முடிவு: | ![]() |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | ஹரிபூர், ஆப்டாபாத், மன்செரா, பட்டாகிராம், பேஷம், பத்தான், தாசு, ஜில்ஜித்-பல்டிஸ்தான், சிலாஸ், கில்கித், ஆலியாபாத், குல்மித், சூஸ்த், தஷ்குர்கன், உபல், கஷ்கர் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
வார்ப்புரு:Infobox road/browselinks/பாகிஸ்தான் |
இது 4714 மீட்டர் உயரமுள்ள காரகோரம் மலைத்தொடரின் குஞ்செராப் கணவாய் வழியாகச் செல்லும் உலகின் உயரமான சாலை ஆகும்.[1][2]ஆசிய நெடுஞ்சாலை 4இன் ஒரு பகுதியாக காரகோரம் நெடுஞ்சாலை உள்ளது.