From Wikipedia, the free encyclopedia
கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 1450 - கிமு 1200) பிந்தைய வெண்கல காலத்திற்கும், இரும்புக் காலத்திற்குத் துவக்கத்தில் வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் தோன்றிய ஒரு தொல் பண்பாடாகும். இப்பண்பாடு பிந்தைய வேதகால பண்பாட்டுடன் தொடர்புடையது. பிந்தைய வெண்கலக் காலத்திற்கும், துவக்க கால இரும்புக் காலத்திற்கும் இடையே தோன்றியது கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு.
மேற்கு கங்கை ஆற்றுச் சமவெளியில், தற்கால மேற்கு உத்தரப் பிரதேசத்தில் கிமு 1450 - கிமு 1200 இடைப்பட்ட காலத்தில் இப்பண்பாடு செழித்திருந்தது. இப்பாண்பாட்டுக் காலத்திற்குப் பின்னர் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 - கிமு. 600) கிழக்கு உத்தரப் பிரதேசம், பிகார், வங்காளம் மற்றும் மத்திய இந்தியா பகுதிகளில் செழித்து விளங்கியது. சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டிற்கு பின்னர் வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு [2]காலத்தில் (கிமு 700 - கிமு 500 ) ஹரியங்கா வம்சத்தின் மகத நாடு உள்ளிட்ட 16 மகாஜனபத நகர அரசுகள் தோன்றியது.
காவி நிற மட்பாண்டப் பண்பாட்டிற்குப் பின் தோன்றிய கருப்பு சிவப்பு மட்பாண்ட பண்பாட்டுக் காலத்தில் நெல், கோதுமை, பார்லி பயிரிடும் தொழில்கள் செழித்ததுடன், சங்கு, செப்பு, சுடுமண்ணால் ஆன நகையணிகள் செய்யப்பட்டன. [3]
கருப்பு, சிவப்பு மட்பாண்ட பண்பாட்டிற்குரிய பகுதிகளாக, இந்தியாவின் பஞ்சாப், குஜராத் பகுதிகளில் உள்ள சிந்துவெளி நாகரீகத்தின் பிந்தைய அரப்பா காலத்திய தொல்லியல் களங்கள் அறியப்படுகிறது.
பிந்தைய சிந்துவெளி களங்களமான, அரப்பாவின் பஞ்சாப் மற்றும் குஜராத் பகுதிகளில் கருப்பு சிவப்பு மட்பாண்டப் பண்பாட்டுக் களங்கள், பிந்தைய சிந்துவெளி களங்களமான, அரப்பா மட்பாண்டப் பண்பாட்டுடன் தொடர்புறுத்தி தொல்லியல் ஆய்வாளர்கள் பேசுகின்றனர்.
மேலும் திரிபுவன் என். இராய் போன்ற தொல்லியல் அறிஞர்கள், சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு மற்றும் வடக்கின் மெருகூட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டின் மீது கருப்பு சிவப்பு மட்பாண்டப் பண்பாட்டின் தாக்கம் இருந்ததாக கூறுகின்றனர்.[4] கருப்பு, சிவப்பு (BRW) மட்பாண்ட பண்பாட்டை சிந்துவெளி நாகரீகத்தின் மேற்கு பகுதியினர் அறியப்படாத ஒன்றாகும். [5]
இரும்பின் பயன்பாடு முதன்முதலில் மெசொப்பொத்தேமியாவின் இட்டைட்டு மக்கள், செமிடிக் மக்கள் நன்கு அறிந்திருந்தனர். அண்மைய கண்டுபிடிப்புகளின் படி, வட இந்தியாவில் இரும்புக் காலத்தில், கிமு 1800 - 1000-க்கும் இடைப்பட்ட காலத்தில் அறியப்பட்டதாகக் கருதப்படுகிறது.[6] கருப்பு-சிவப்பு பண்பாடு காலத்திய இரும்புப் பொருட்கள், மெசொப்பொத்தேமியாவில் கண்டெடுத்த இரும்புப் பொருட்களிலிருந்து மிகவும் வேறுபட்டது.[7]
Seamless Wikipedia browsing. On steroids.