மத்திய இந்தியா
From Wikipedia, the free encyclopedia
மத்திய இந்தியா (Central India), மத்தியப் பிரதேசம், கிழக்கு மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் பரப்புகளைக் கொண்டது. [1][2][3]மத்திய இந்தியாவின் வணிகத் தலைநகரமான இந்தூர், மத்திய இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம் ஆகும். போபால் மற்றும் ராய்பூர் பிற முக்கிய நகரங்கள் ஆகும். மத்திய இந்தியாவில் வட இந்தியாவின் பண்பாட்டுத் தாக்கம் கொண்டதால், இந்தி மொழி மற்றும் வட்டார மொழிகள் அதிகம் பேசப்படுகிறது.
மத்திய இந்தியா | |
---|---|
![]() | |
நாடு | இந்தியா |
மாநிலங்கள் | |
பெரிய நகரம் | இந்தூர் |
மக்கள் தொகை மிக்க நகரங்கள(2011) | சத்தீஸ்கர் மாநிலம்:
மத்தியப் பிரதேசம்: |
பரப்பளவு | |
• மொத்தம் | 443,443 km2 (1,71,214 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 10,05,25,580 |
• அடர்த்தி | 230/km2 (590/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (UTC+5:30) |
அலுவல் மொழிகள் |


வரலாறு
மத்திய இந்தியாவில் கற்கால குடியிருப்புகள் இருந்ததற்கு பீம்பேட்கா குகைகள் சான்றாக உள்ளது. நர்மதை ஆற்றுச் சமவெளியின் பல்வேறு இடங்களில் கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏரண், கயதா, மகேஷ்வர், நாக்தா மற்றும் நவ்ததோலி இடங்களில் செம்புக்காலத்திய தொல்லியல் களங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிமு 30,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்களுடன் குகைகள் மத்திய இந்தியாவில் பல்வேறு இடங்களில் கண்பிடிக்கப்பட்டுள்ளது. தற்கால மனிதக் குடியிருப்புகள் துவக்கத்தில் நர்மதை ஆறு, சம்பல் ஆறு மற்றும் பேட்வா ஆற்றுச் சமவெளிகளில் உருவானது.
வேதகாலத்தில் மத்திய இந்தியாவின் விந்திய மலைத்தொடர், இந்தோ ஆரியர்களின் தெற்கு எல்லையாக விளங்கியது.
மராத்தியப் பேரரசின் ஒரு கிளையான ஓல்கர் வம்சத்தினர், இந்தூர் இராச்சியத்தை ஆண்டனர்.
விந்தியப் பிரதேசத்தின் தற்கால புந்தேல்கண்ட் மற்றும் பகேல்கண்ட் பகுதிகளை ஆண்ட 35 சுதேச சமஸ்தானங்கள், 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956ல் மத்திய பாரதம் மற்றும் விந்தியப் பிரதேச மாநிலங்கள் மற்றும் போபால் ஆகிய பகுதிகள் மத்தியப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. 2000ம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்து சத்தீஸ்கர் மாநிலம் நிறுவப்பட்டது.
பொருளாதாரம்
மத்திய இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.25 இலட்சம் கோடி ரூபாய் ஆகும். [4][5]
மத்திய இந்தியா, நிலக்கரியால் இயங்கும் அனல் மின்நிலையங்கள் மூலம் இந்தியாவின் 10.96% சதவீத மின்சாரம் உற்பத்தி செய்கிறது [6]
பண்பாடு
மொழி
மத்திய இந்தியா, இந்தி பேசும் பகுதியில் அமைந்துள்ளதால், இந்தி மொழி அதிகம் பேசப்படுகிறது. மேலும் பழங்குடி இன மக்கள் முண்டா மொழிகள், கொற்கு மொழி போண்டா மொழி மற்றும் கோண்டி மொழி பேசுகின்றனர்.
மத்திய இந்தியாவின் புவியியல்
மத்திய இந்தியாவின் முக்கிய புவியியல் பிரதேசங்கள் கோண்டுவானா, புந்தேல்கண்ட், மால்வா பீடபூமி மற்றும் தக்கான பீடபூமியின் விதர்பா ஆகும். மத்திய இந்தியாவில் விந்திய மலைத்தொடர் மற்றும் சாத்பூரா மலைத்தொடர்கள் பரவியுள்ளது. மேலும் இப்பகுதியில் நர்மதை ஆறு, சம்பல் ஆறு மற்றும் பேட்வா ஆறுகள் பாய்கிறது.
மத்திய இந்தியாவின் பிரச்சனைகள்
மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மலைக்காடுகளில் காடுகளை நம்பி உள்ள பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளான பஸ்தர், பிஜப்பூர், தந்தேவாடா, ராஜ்நாந்துகாவ், சுக்மா, நாராயண்பூர், சர்குஜா, கோரியா, ஜஷ்பூர், காங்கேர் மாவட்டங்களில் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகளால் இப்பகுதி மக்களுக்கும், அரசுப் படைக்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.[7]
புகழ் பெற்ற இடங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.