கரக சதுர்த்தி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கரக சதுர்த்தி அல்லது கர்வா சௌத் (Karva Chauth, இந்தி: करवा चौथ, பஞ்சாபி: ਕਰਵਾ ਚੌਥ, உருது: کروا چوتھ) வட இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும் இந்து மற்றும் சீக்கிய சமயத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் ஓர் வருடாந்தர பண்டிகை ஆகும். இந்த நாளில் காலை (சூரிய உதயம்) முதல் மாலை (நிலவு உதயம்) வரை இப்பெண்கள் உண்ணாதிருந்து, தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.[1][2] இந்த உண்ணாநோன்பு உத்தராகாண்ட், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீர், அரியானா, பஞ்சாப், இராசத்தான் மற்றும் குசராத் மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.[1][3][4][5] வட இந்திய நாட்காட்டியில் கார்த்திகை மாதத்தில் (தமிழ் ஐப்பசி) முழு நிலவு கழிந்த நான்காம் நாள் கொண்டாடப்படுகிறது. அண்மைக்காலங்களில் இந்த விழா இந்தித் திரைப்படங்களின் தாக்கத்தால் திருமணமாகாத பெண்களும் தங்கள் காதலர்கள்/ கணவராக வரிந்தவர்களின் நலனுக்காக கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர்.[6]
கரக சதுர்த்தி | |
---|---|
கடைபிடிப்போர் | வட இந்திய, மேற்கு இந்திய இந்து மற்றும் சீக்கிய மகளிர் |
வகை | மழைக்கால பண்டிகை |
கொண்டாட்டங்கள் | 1 நாள் |
அனுசரிப்புகள் | திருமணமான பெண்டிர் உண்ணாதிருத்தல் |
தொடக்கம் | வட இந்திய கார்த்திகை மாத்த்தின் (கார்த்திக்) தேய்பிறையின் (முழுநிலவிற்கு பின்பான) நான்காம் நாள். |
நாள் | அக்டோபர்/நவம்பர் |
தொடர்புடையன | விஜயதசமி மற்றும் தீபாவளி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.