க. அன்பழகன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
க. அன்பழகன் (K. Anbazhagan, திசம்பர் 19, 1922 - மார்ச் 7, 2020)[1] தமிழகத்தின் முதிர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர், தமிழக தி.மு.க. அரசின் அமைச்சரவையில், பல்வேறு காலகட்டங்களில், நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த இவரை 'பேராசிரியர்' என இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.[2] 2001-2006இல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இவர் 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2020 மார்ச்சு 7 ஆம் நாள், தம்முடைய 97 ஆம் வயதில், சென்னையில் காலமானார்.[3][4] தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 75 ஆண்டு கால நண்பராக இருந்தவர்.[4]
விரைவான உண்மைகள் க. அன்பழகன், திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ...
க. அன்பழகன் | |
---|---|
திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் | |
பதவியில் 17 மே 1977 – 7 மார்ச் 2020 | |
முன்னையவர் | இரா. நெடுஞ்செழியன் |
பின்னவர் | துரைமுருகன் |
தமிழ்நாடு நிதி அமைச்சர் | |
பதவியில் 13 மே 2006 – 15 மே 2011 | |
தமிழ்நாடு கல்வி அமைச்சர் | |
பதவியில் 13 மே 1996 – 13 மே 2001 | |
பதவியில் 27 சனவரி 1989 – 30 சனவரி 1991 | |
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1996–2011 | |
தொகுதி | துறைமுகம் |
பதவியில் 16 நவம்பர் 1984 – 26 சனவரி 1989 | |
தொகுதி | பூங்கா நகர் |
பதவியில் 30 சூன் 1977 – 15 நவம்பர் 1984 | |
தொகுதி | புரசைவாக்கம் |
தமிழ்நாடு சுகாதார, சமூக நல அமைச்சர் | |
பதவியில் 15 மார்ச் 1971 – 31 சனவரி 1976 | |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 4 மார்ச் 1967 – 15 மார்ச் 1971 | |
தொகுதி | திருச்செங்கோடு |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1 ஏப்ரல் 1957 – 25 பெப்ரவரி 1967 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கல்யாணசுந்தரம் அன்பழகன் (1922-12-19)19 திசம்பர் 1922 தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 7 மார்ச்சு 2020(2020-03-07) (அகவை 97) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம்(s) | அண்ணா நகர், சென்னை, தமிழ்நாடு |
மூடு