ஏடன் வளைகுடா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
ஏடன் வளைகுடா (அரபு மொழி: خليج عدن Ḫalīǧ ʻAdan, சோமாலி: 'Gacanka Cadmeed') என்பது அரபிக் கடலின் மீதுள்ள அரேபிய தீபகற்பத்தின் தென் கடலோரத்திலுள்ள ஏமன் மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள சோமாலியா நாட்டிற்கும் இடையேயுள்ள வளைகுடா ஆகும். இது வடமேற்கில், செங்கடலினை பாப்-எல்-மன்டே நீரிணைப்பின் வழியாக இணைகிறது, இது 20 மைல்கள் (32 கிலோமீட்டர்கள்) பரவலாகும். இது ஏமன் நாட்டிலுள்ள துறைமுக நகரான ஏடன் பெயரினைப் பகிர்ந்துள்ளது. வரலாற்று ரீதியாக, ஏடன் வளைகுடாவின் தெற்குப் பகுதியில் உள்ள பண்டைய சோமாலியாவின் துறைமுக நகரமான பெர்பெராவின் காரணமாக "பெர்பரே வளைகுடா" என அழைக்கப்பட்டது.[1][2] இருப்பினும், காலனித்துவ காலத்தின்போது ஏடன் நகரம் வளர்ந்தபோது, "ஏடன் வளைகுடா" என்ற பெயர் பிரபலமானது.
ஏடன் வளைகுடா | |
---|---|
ஏடன் வளைகுடாவின் வரைபடம் | |
அமைவிடம் | அரபிக் கடல் |
ஆள்கூறுகள் | 12°N 48°E |
வகை | வளைகுடா |
சராசரி ஆழம் | 500 m (1,600 அடி) |
அதிகபட்ச ஆழம் | 2,700 m (8,900 அடி) |
அதிகபட்ச வெப்பநிலை | 28 °C (82 °F) |
குறைந்தபட்ச வெப்பநிலை | 15 °C (59 °F) |
இவ்நீர்வழி மத்தியதரைக் கடல் மற்றும் அரபிக் கடல் இடையேயான சூயஸ் கால்வாய் கப்பல் பாதையின் முக்கியமான ஒரு பகுதி ஆகும், இதன் வழியே 21,000 கப்பல்கள் ஆண்டுதோறும் கடந்து செல்லும்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.