![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Enrico_Fermi_1943-49.jpg/640px-Enrico_Fermi_1943-49.jpg&w=640&q=50)
என்ரிக்கோ பெர்மி
From Wikipedia, the free encyclopedia
என்ரிக்கோ பெர்மி (Enrico Fermi; செப்டம்பர் 29, 1901 – நவம்பர் 28, 1954) என்பவர் ஒரு புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞராவார். உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கியமைக்காகவும் குவாண்டம் கொள்கை, அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்புகளுக்காகவும் பெரிதும் போற்றப்படுகிறார். ஃபெர்மி தூண்டல் கதிரியக்கத்தில் இவரது பங்களிப்புகளுக்காக 1938-ம் ஆண்டில் இவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது[1]. 1952 இல் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை தனிமம் ஒன்றுக்கு இவரது நினைவாக பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது.
விரைவான உண்மைகள் என்ரிக்கோ பெர்மிEnrico Fermi, பிறப்பு ...
என்ரிக்கோ பெர்மி Enrico Fermi | |
---|---|
![]() | |
பிறப்பு | (1901-09-29)29 செப்டம்பர் 1901 ரோம், இத்தாலி |
இறப்பு | நவம்பர் 28, 1954(1954-11-28) (அகவை 53) சிக்காகோ, இலினோய், ![]() |
குடியுரிமை | இத்தாலி (1901-1938) ஐக்கிய அமெரிக்கா (1944-1954) |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | Scuola Normale Superiore University of Göttingen University of Leiden University of Rome La Sapienza கொலம்பியா பல்கலைக்கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | Scuola Normale Superiore |
ஆய்வு நெறியாளர் | லியூஜி புச்சியாண்டி |
அறியப்படுவது | புதிய கதிரியக்கத் தனிமங்கள் கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு தொடர்வினை, பெர்மி-டிராக் புள்ளியியல் பீட்டா சிதைவுக் கொள்கை |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1938) |
மூடு