From Wikipedia, the free encyclopedia
உலக சதுரங்க வாகை 2014 (World Chess Championship 2014) என்பது நடப்பு உலக வாகையாளர் மாக்னசு கார்ல்சனுக்கும், விசுவநாதன் ஆனந்த்துக்கும் இடையில் 2014 ஆம் ஆண்டுக்கான உலக வாகையாளரைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற சதுரங்கப் போட்டித் தொடராகும். இவ்விறுதிப் போட்டித்தொடர் உருசியாவின் சோச்சி நகரில் 2014 நவம்பர் 7 முதல் நவம்பர் 28 வரை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் ஆதரவுடன் நடைபெற்றது.[2]
2013 வெற்றியாளர் | எதிர்த்துப் போட்டியிட்டவர் |
மாக்னசு கார்ல்சன் (நோர்வே) | விசுவநாதன் ஆனந்த் (இந்தியா) |
6½ | 4½ |
பிறப்பு 30 நவம்பர் 1990 அகவை 23 | பிறப்பு 11 டிசம்பர் 1969 அகவை 44 |
2013 உலக சதுரங்கப் போட்டியின் வெற்றியாளர் | 2014 போட்டியாளர் தேர்வின் வெற்றியாளர் |
தரவரிசை: 2863 (உலக முதல் வரிசை ஆட்டக்காரர்)[1] | தரவரிசை: 2792 (உலக 6ம் வரிசை ஆட்டக்காரர்)[1] |
திட்டமிடப்பட்ட 12 ஆட்டங்களில் 11வது ஆட்டத்தின் முடிவில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். கார்ல்சன் ஓர் ஆட்டத்தை மட்டும் இழந்து, ஏழு ஆட்டங்களை சமப்படுத்தி தனது உலக வாகையாளர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
இறுதிப் போட்டித் தொடரில் மாக்னசு கார்ல்சனை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எட்டுப் போட்டியாளர்கள் அடங்கிய இரட்டை தொடர் சுழல்முறைப் போட்டிகள் உருசியாவின் காண்டி-மான்சீஸ்கு நகரில் 2014 மார்ச் 13 முதல் 31 வரை நடைபெற்றன.[2] இப்போட்டி முடிவுகள் வருமாறு:[3]
வரிசை | ஆட்டக்காரர் | எலோ தரவரிசை புள்ளிகள் மார்ச் 2014[5] |
1 (விஆ) |
2 (செக) |
3 (விகி) |
4 (சம) |
5 (திஅ) |
6 (லெஅ) |
7 (பீசு) |
8 (வெதோ) |
புள்ளிகள் | சமம்[3] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
H2H | வெற்றிகள் | சொப | ||||||||||||||||||||
வெ | க | வெ | க | வெ | க | வெ | க | வெ | க | வெ | க | வெ | க | வெ | க | |||||||
1 | விசுவநாதன் ஆனந்த் | 2770 | ½ | ½ | ½ | ½ | ½ | 1 | ½ | ½ | 1 | ½ | ½ | ½ | 1 | ½ | 8½ | — | 3 | 57.25 | ||
2 | செர்கே கர்சாக்கின் | 2766 | ½ | ½ | 1 | 0 | ½ | ½ | ½ | ½ | 0 | 1 | ½ | 1 | ½ | ½ | 7½ | — | 3 | 51.75 | ||
3 | விளாடிமிர் கிராம்னிக் | 2787 | ½ | ½ | 1 | 0 | 1 | ½ | ½ | ½ | ½ | ½ | 0 | ½ | 1 | 0 | 7 | 2½ | 3 | 49.25 | ||
4 | சக்கிரியார் மமிதியாரொவ் | 2757 | 0 | ½ | ½ | ½ | ½ | 0 | 1 | ½ | 1 | 0 | 1 | ½ | ½ | ½ | 7 | 2 | 3 | 48.00 | ||
5 | திமீத்ரி அந்திரேகின் | 2709 | ½ | ½ | ½ | ½ | ½ | ½ | ½ | 0 | 1 | ½ | ½ | 0 | 1 | ½ | 7 | 1½ | 2 | 48.50 | ||
6 | லெவோன் அரோனியான் | 2830 | ½ | 0 | 0 | 1 | ½ | ½ | 1 | 0 | ½ | 0 | 1 | ½ | ½ | ½ | 6½ | 1½ | 3 | 45.00 | ||
7 | பீட்டர் சுவித்லர் | 2758 | ½ | ½ | 0 | ½ | ½ | 1 | ½ | 0 | 1 | ½ | ½ | 0 | 1 | 0 | 6½ | ½ | 3 | 46.00 | ||
8 | டோப்பலோவ் | 2785 | ½ | 0 | ½ | ½ | 1 | 0 | ½ | ½ | ½ | 0 | ½ | ½ | 1 | 0 | 6 | — | 2 | 42.25 |
2014 ஆம் ஆண்டுக்கான வாகையாளரைத் தேர்ந்தெடுக்கும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நோர்வேயைச் சேர்ந்த மாக்னசு கார்ல்சன், இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் ஆகியோருக்கு இடையில் உருசியாவின் சோச்சி நகரில் 2014 நவம்பர் 7 தொடக்கம் 28 வரை நடைபெற்றன.
இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு முன்னர், 2005 முதல் 2014 நவம்பர் 6 வரை, கார்ல்சனும், ஆனந்தும் 40 போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர். இவற்றில் கார்ல்சன் 6 போட்டிகளிலும், ஆன்ந்த் ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். 28 போட்டிகள் வெற்றி-தோல்வியின்றி முடிந்தன.[6]
இறுதிப் போட்டித் தொடரில் கார்ல்சன், ஆனந்த் இருவருக்கும் இடையே ஆகக்கூடியது 12 மரபார்ந்த ஆட்டங்களும், தேவைப்படின், மேலதிக சமநிலை-முறிப்பு ஆட்டங்களும் இடம்பெறுகின்றன. மரபார்ந்த ஆட்டங்களில், முதல் 40 நகர்வுகளுக்கு 120 நிமிடங்களும், அடுத்த 20 நகர்வுகளுக்கு 60 நிமிடங்களும் எடுத்துக் கொள்ளலாம். மீதமான ஆட்டத்திற்கு ஒவ்வொரு நகர்விற்கும் 30 செக்கன்களாக மொத்தம் 15 நிமிடங்களும் எடுத்துக் கொள்ளலாம்.[8] மரபார்ந்த போட்டித் தொடரில் முதலாவதாக 6.5 புள்ளிகள் பெறும் போட்டியாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
மொத்தப் பணப் பரிசு 1 மில்லியன் யுரோக்கள் ஆகும். 12 மரபார்ந்த போட்டிகளுக்குள் தொடர் முடிவடையும் பட்சத்தில், இப்பரிசில் 60 விழுக்காடு வெற்றி பெறுபவருக்கும், மீதி தோற்பவருக்கும் தரப்படும். சமநிலை-முறிப்பில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவாராயின், வெற்றியாளர் 55 விழுக்காடும் தோற்பவர் 45 விழுக்காடும் பெறுவர்.[9]
தரவரிசை | ஆட்டம் 1 8 நவ. | ஆட்டம் 2 9 நவ. | ஆட்டம் 3 11 நவ. | ஆட்டம் 4 12 நவ. | ஆட்டம் 5 14 நவ. | ஆட்டம் 6 15 நவ. | ஆட்டம் 7 17 நவ. | ஆட்டம் 8 18 நவ. | ஆட்டம் 9 20 நவ. | ஆட்டம் 10 21 நவ. | ஆட்டம் 11 23 நவ. | ஆட்டம் 12 25 நவ. | புள்ளிகள் | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாக்னசு கார்ல்சன் (நோர்வே) | 2863 | ½ | 1 | 0 | ½ | ½ | 1 | ½ | ½ | ½ | ½ | 1 | தேவைப் படவில்லை |
6½ |
விசுவநாதன் ஆனந்த் (இந்தியா) | 2792 | ½ | 0 | 1 | ½ | ½ | 0 | ½ | ½ | ½ | ½ | 0 | 4½ |
முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட போட்டியாளர் வெள்ளைக் காய்களுடன் விளையாடுவார்.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
போட்டியின் முதலாவது ஆட்டம் 2014 நவம்பர் 8 இல் இடம்பெற்றது. ஆனந்த் இராணியின் சிப்பாயைக் கொண்டு ஆட்டத்தைத் தொடக்கினார். பதிலுக்கு கார்ல்சன் இதற்கு குரூன்ஃபெல்டு பாதுகாப்பு முறையுடன் விளையாடினார். ஆட்டம் தொடரும் போது ஆனந்த் சில காய்களை இழந்தாலும், இடையில் இராணியுடனும் கோட்டையுடனும் விளையாடி உலக வாகையாளருடன் ஆட்டத்தை சமனாக முடித்துக் கொண்டார்.[10]
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
இரண்டாவது ஆட்டம் 2014 நவம்பர் 9 இல் நடைபெற்றது. ஆட்ட ஆரம்பம் உருய் உலோப்பசு முறையின் பெர்லின் வேறுபாட்டுடன் தொடங்கியது. கார்ல்சன் 4.0-0 Nxe4 இற்குப் பதிலாக 4.d3 என ஆடினார். ஆனந்தின் இரண்டு c-சிப்பாய்களுக்குப் பதிலாக கார்ல்சன் அமைச்சரைக் கொடுத்து விளையாடினார். ஆனாலும், ஆனந்தின் 16...Rd8, 18...Be6, 19...Ng6 நகர்வுகள் ஆட்டத்தை கார்ல்சனுக்கு சார்பாக்கியது. இறுதியாட்டம் கார்ல்சனுக்கு சாதகமானது. கார்ல்சன் வெற்றி பெற்றார்.[12]
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
மூன்றாம் ஆட்டம் 2014 நவம்பர் 11 இல் இடம்பெற்றது. ஆனந்த்தின் மிகத் துணிச்சலான ஆரம்ப நகர்வு இவ்வாட்டத்தின் போக்கை நிர்ணயித்தது. ஆனந்தின் ஆரம்ப இராணிப் பக்கத்தில் இருந்தான தாக்குதலை அடுத்து அவர் மிக விரைவில் ஆட்டத்தைத் தனக்கு சார்பானதாக ஆக்கிக் கொண்டார்.[13][14] இவ்வெற்றியுடன் ஆனந்த் ஆட்டத்தை 1½–1½ என சமப்படுத்தினார். உலக வாகையாளர் போட்டி ஒன்றில் கார்ல்சனை ஆனந்த் வென்ற முதலாவது ஆட்டம் இதுவாகும்.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
நான்காவது ஆட்டம் 2014 நவம்பர் 12 இல் இடம்பெற்றது. ஆனந்த் இப்போட்டியில் முதல் தடவையாக சிசிலியன் தற்காப்பு முறையில் ஆடத் தொடங்கினார். கறுப்பின் தனிமைப்படுத்தப்பட்ட d-சிப்பாயினால் கார்ல்சன் சிறிதளவு முன்னே நின்றார். ஆனாலும், ஆட்டம் இறுதியில் சமனாக முடிந்தது.[15][16]
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
ஐந்தாவது ஆட்டம் 2014 நவம்பர் 14 இல் நடைபெற்றது. கார்ல்சன் அரசியின் இந்தியப் பாதுகாப்பு முறையில் ஆடத் தொடங்கினார். ஆனலும், ஆனந்த் மிக விரைவாக முன்னேறினார். 22 ஆம் நகர்வில், கார்ல்சன் b2 இல் இருந்த சிப்பாயைக் கைப்பற்றினாலும், மிக விரைவிலேயே அதனைத் திரும்பக் கொடுக்க வேண்டியதாயிற்று. இதன் மூலம் தனது அரசன் பக்கமுள்ள சிப்பாய்களின் அமைப்பைக் குழப்ப வேண்டியதாயிற்று. அதன் பின்னர் ஆட்டம் சமனாக முடிந்தது.[18]
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
ஆறாவது ஆட்டம் 2014 நவம்பர் 15 இல் இடம்பெற்றது. ஆரம்பத்திலேயே அரசியைப் பரிமாற்றம் செய்த கார்ல்சன், விரைவிலேயே ஆட்டத்தில் வெற்றி பெறும் நிலைக்கு வந்தார். 26 ஆம் நகர்வில் இரு பெரும் தவறுகள் இடம்பெற்றன. கார்ல்சனின் 26.Kd2?? என்ற நகர்விற்கு ஆனந்த் 26...Nxe5! 27.Rxg8 Nxc4+ 28.Kd3 Nb2+ 29.Ke2 Rxg8, எனப் பதிலளித்திருக்க வேண்டும், இதன் மூலம் கருப்புக்கு ஒரு சிப்பாய் அதிகமாக இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்திருக்கும். ஆனால் ஆனந்து இந்த வாய்ப்பைத் தவற விட்டு, 26...a4?? என விளையாடினார். கார்ல்சன் மேலும் தவறிழைக்காமல், இலகுவாக வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார்.[19]
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
ஏழாவது ஆட்டம் 2014 நவம்பர் 17 அன்று நடைபெற்றது. உருய் உலோப்பசு-பெரின் பாதுகாப்பு என்ற ஆரம்ப நகர்வு முறை மூஅம் கார்ல்சன் விளையாடத் தொடங்கினார். ஒரு சிப்பாயை இழந்திருந்தாலும், கார்ல்சனின் நிலையில் சிறிதளவு மேல்தன்மை காணப்பட்டது. 31 ஆம் நகர்வில் ஆனந்த் இரு சிப்பாய்களுக்காகத் தனது அமைச்சரைக் கொடுத்து விளையாடி, அரசு பக்கத்தில் இருந்த சிப்பாய்களை இல்லாமல் ஆக்கினார். மேலதிக குதிரை ஒன்றுடன் வெற்றியைத் தனதாக்கிக் கொள்ள முயன்றார். ஆனாலும், அவரால் ஆனந்தின் பாதுகாப்புத் தடையை உடைக்க முடியாமல் போனது. இறுதியில், இருவரும் சிப்பாய்கள் எதுவுமில்லாமல் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு ஆட்டத்தை சமப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாட்டத்தின் மூலம் கார்ல்சன் ஆனந்தை விட ஒரு புள்ளி முன்னே உள்ளார்.[20]
உலக வாகையாளர் போட்டியொன்றில் விளையாடப்பட்ட இரண்டாவது மிக நீண்ட போட்டி இதுவாகும். 1978 ஆம் ஆண்டு போட்டியின் 5ம் ஆட்டத்தின் போது விக்தர் கர்ச்னோயும் அனத்தோலி கார்ப்பொவ்வும் 124 நகர்வுகள் விளையாடி சாத்தியமான நகர்வற்ற நிலை முடிவுக்கு வந்தமையே மிக நீண்ட போட்டியாகும்.[21]
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
எட்டாவது ஆட்டம் 2014 நவம்பர் 18 அன்று இடம்பெற்றது. ஆனந்த் இராணியின் உத்தி மறுப்பு (Bf4 நகர்வு) மூலம் விளையாடினார். மூன்றாம் ஆட்டத்தில் இந்நகர்வு ஆனந்துக்கு வெற்றியை ஈட்டித் தந்தது. ஆனாலும், கார்ல்சன் இம்முறை 1970கள்-90கள் வரை பிரபலமாகவிருந்த 6...c5 என்ற பழையகால நகர்வு மூலம் எதிர்கொண்டார். இதன் மூலம் அவருக்கு ஆட்டத்தை இலகுவாக சமப்படுத்த முடிந்தது.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
ஒன்பதாவது ஆட்டம் 2014 நவம்பர் 20 அன்று இடம்பெற்றது. உருய் உலோப்பசு பெர்லின் பாதுகாப்பு ஊடாக ஆட்டம் ஆரம்பமானது. 20வது நகர்வில் மூன்றுதடவைகள் ஒரே நகர்வுகள் நகர்த்தப்பட்டதை அடுத்து ஆட்டம் சமனாக முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. இச்சமநிலையுடன் கார்ல்சன் 5-4 என்ற கணக்கில் முன்னணிக்கு வந்தார்.[22]
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
பத்தாவது ஆட்டம் 2014 நவம்பர் 21 இல் நடைபெற்றது. முதலாவது ஆட்டம் போலவே கார்ல்சன் இம்முறையும் குரூன்பெல்டு பாதுகாப்பு முறையில் ஆடத் தொடங்கினார். ஆனால் ஆனந்த் இம்முறை உருசிய முறையில் விளையாடினார். பெரும்பாலான நேரத்தில் கார்ல்சன் கடுமையான அழுத்தத்துடனேயே ஆடவேண்டி இருந்தது. இறுதியில் இருவரும் ஆட்டத்தை சமப்படுத்த ஒப்புக் கொண்டார்கள்.[23]
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
பதினோராவது ஆட்டம் 2014 நவம்பர் 23 இல் இடம்பெற்றது. இவ்வாட்டத்தில், ஆன்ந்த் 45வது நகர்வில் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து வாகையாளர் தேர்வுக்கான 6.5 புள்ளிகளைப் பெற்று கார்ல்சன் போட்டியில் வெற்றி பெற்று உலக வாகையாளர் விருதைத் தக்க வைத்துக் கொண்டார்.[24]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.