விளாதிமிர் பொரிசோவிச் கிராம்னிக் (Vladimir Borisovich Kramnik, உருசியம்: Влади́мир Бори́сович Кра́мник, பிறப்பு: சூன் 25, 1975) உருசியாவைச் சேர்ந்த அனைத்துலகத்தரம் கொண்ட சதுரங்க வீரர். இவர் 2000 முதல் 2006 வரை பீடே உலக சதுரங்கப் போட்டியை எதிர்த்து தனியாக நடத்தப்பட்ட கிலாசிகல் உலக சதுரங்க வாகையாளராகவும், 2006 முதல் 2007 வரை பீடே ஒன்றுபட்ட வாகையாளராகவும் இருந்தவர் (2006 இல் இரண்டு போட்டிகளும் ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட வாகையாளர் போட்டி நடந்தது) .

விரைவான உண்மைகள் விளாதிமிர் கிராம்னிக், முழுப் பெயர் ...
விளாதிமிர் கிராம்னிக்
Thumb
2005 ஆம் ஆண்டில் கிராம்னிக்
முழுப் பெயர்விளாதிமிர் பொரிசோவிச் கிராம்னிக்
நாடு உருசியா
பட்டம்கிராண்ட்மாஸ்டர்
உலக வாகையாளர்2000—2006 (கிலாசிகல்)
2006—2007 (ஒன்றுபட்ட)
பிடே தரவுகோள்2772
(அக்டோபர் 2008 பீடே தரவுப் பட்டியலின்படி 6ம் இடத்தில்)
உச்சத் தரவுகோள்2809 (ஜனவரி 2002)[1]
மூடு

2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக வாகையாளரானார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் லேக்கோவை வென்று மீண்டும் உலக வெற்றியாளரானார்.

2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே உலக வாகையாளரான வெசெலின் டோபலோவை வென்று உலக வாகையாளர் பட்டத்தைப் பெற்றார்.

2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார். அடுத்த ஆண்டு அக்டோபர் 2008 இல் மீண்டும் விஸ்வநாதன் ஆனந்துடன் ஆடி தோற்றார்[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.