From Wikipedia, the free encyclopedia
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (Fédération Internationale des Échecs, World Chess Federation) என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (பீடே) என அழைக்கப்படுகிறது.[1]
FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் "நாம் அனைவரும் ஒரே மக்கள்" என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 158 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.