அவுஸ்திரேலிய டொலர்
நாணயம் / From Wikipedia, the free encyclopedia
அவுஸ்திரேலிய டொலர் (ஆஸ்திரேலிய டாலர், Australian Dollar) 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ குறீயீட்டால் குறிக்கப்படும். சிலவேளைகளில் AUD அல்லது A$ எனும் குறியீடுகளாலும் குறிக்கப்படும். 1 டொலர் 100 சதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]
விரைவான உண்மைகள் ஐ.எசு.ஓ 4217, குறி ...
| |||||
ஐ.எசு.ஓ 4217 | |||||
---|---|---|---|---|---|
குறி | AUD (எண்ணியல்: 036) | ||||
சிற்றலகு | 0.01 | ||||
மதிப்பு | |||||
துணை அலகு | |||||
1/100 | சதம் | ||||
வங்கித்தாள் | $5, $10, $20, $50, $100 | ||||
Coins | ¢5, ¢10, ¢20, ¢50, $1, $2 | ||||
மக்கள்தொகையியல் | |||||
பயனர்(கள்) | அவுஸ்திரேலியா, கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் | ||||
வெளியீடு | |||||
நடுவண் வங்கி | அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கி | ||||
இணையதளம் | www.rba.gov.au | ||||
மதிப்பீடு | |||||
பணவீக்கம் | 3.3% (அவுஸ்திரேலியா மட்டும்) | ||||
ஆதாரம் | அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கி, டிசம்பர் 2006 | ||||
மூலம் இணைக்கப்பட்டது | டுவாலு டொலர், கிரிபட்டி டொலர் சமமாக |
மூடு
அவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது (பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் முறையே அமெரிக்க டொலர்(அமெரிக்கா), யூரோ (ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்), யென் (ஜப்பான்), ஸ்டேர்லிங் பவுண்ட் (பிரித்தானியா), சுவிஸ் பிராங் (சுவிஸர்லாந்து) என்பன உள்ளன.