From Wikipedia, the free encyclopedia
கிரிபாஸ் (கில்பேர்ட்டீஸ் மொழி: kiribas (கிரிபாஸ்), ஆங்கிலம்:[ˌkɪrəˈbɑti]), என்பது மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். உத்தியோகபூர்வமாக கிரிபாஸ் குடியரசு என அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ளது.[1]. இவை அனைத்தும் 3,500,000 கிமீ² பரப்பளவில் உள்ளன. அனைத்து தீவுகளும் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டுள்ளன. பிரிட்டன் ஆட்சிக்காலத்தில், இந்தத் தீவுகள் கில்பர்ட் என அழைக்கப்பட்டன. இந்த பெயரே மருவி கிரிபட்டி என ஆனது. பெருகிவரும் நீர்ப்பரப்பால், இந்த தீவுகள் விரைவில் மூழ்கக்கூடும் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.[1]
Ribaberikin Kiribati கிரிபாஸ் குடியரசு | |
---|---|
குறிக்கோள்: Te Mauri, Te Raoi ao Te Tabomoa (சுகாதாரம், அமைதி, சுபீட்சம்) | |
நாட்டுப்பண்: Teirake Kaini Kiribati எழுந்து நில், கிரிபட்டி | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | தெற்கு டராவா |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், கில்பேர்ட்டீஸ் மொழி |
அரசாங்கம் | குடியரசு |
• President | அனோட்டெ டொங் |
விடுதலை | |
• ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | ஜூலை 12 1979 |
பரப்பு | |
• மொத்தம் | 726 km2 (280 sq mi) (186வது) |
• நீர் (%) | 0 |
மக்கள் தொகை | |
105,432 (197வது) | |
1,03,000 | |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $206 மில்லியன்1 (213வது) |
• தலைவிகிதம் | $2,358 (136வது) |
நாணயம் | ஆஸ்திரேலிய டாலர் (AUD) |
நேர வலயம் | ஒ.அ.நே+12, +13, +14 |
அழைப்புக்குறி | 686 |
இணையக் குறி | .ki |
1 Supplemented by a nearly equal amount from external sources. |
வான்வழிப் போக்குவரத்திற்கு, கிரிபட்டியின் பெரிய தீவில் ஒரே ஒரு வானூர்தி நிலையம் உள்ளது. இங்கிருந்து பிஜியின் நந்தி நகரத்திற்கு வானூர்திகள் செல்கின்றன. தரைவழிப் போக்குவரத்திற்கு ஒரு சாலை உள்ளது.
மனேபா என்ற கட்டிடம் உள்ளது. இது அரசு அலுவலகமாகவும், தேவாலயமாகவும், சமூகக்கூடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் சமூகமாகவே வாழ்கின்றனர். இங்குள்ள மக்கள் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கிரிபட்டிய மொழியில் இறைவனுக்கான துதி பாடுகின்றனர். பெரும்பான்மையானோர் வீட்டில் பன்றி வளர்க்கின்றனர். மீன்பிடித்தலையும், உழவுத்தொழிலையும் செய்கின்றனர். கவா என்ற செடியில் இருந்து பெறப்படும் சாற்றை மதுவிற்கு மாற்றாக அருந்துகின்றனர்.
தலைநகரான தெற்கு டராவாவில், 51,000 பேர் வாழ்கின்றனர். இது சதுர கி.மீக்கு 5,000 பேர் என்ற அளவில் உள்ளது..
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.